போஸ்ட் ஆபிஸ் ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது பிபிஎஃப் எந்தத் திட்டம் சிறந்த வட்டியை வழங்குகிறது. எதில் முதலீடு செய்யலாம் என்று பார்க்கலாம்.
போஸ்ட் ஆபிஸ் ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் பிபிஎஃப் (PPF) ஆகிய இரண்டும் முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்புகள் ஆகும்.
இதில், நீண்ட காலக் கண்ணோட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் PPF-ல் முதலீடு செய்கின்றனர். இத்திட்டத்தில் வருமான வரி விலக்கு வேறு கிடைக்கிறது. எனினும், இது 15 ஆண்டுகள் மிக நீண்ட லாக்-இன் காலத்துடன் வருகிறது.
போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்
அதேநேரத்தில் போஸ்ட் ஆபிஸ் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் 1,2,3 ஆண்டுகள் என கிடைக்கின்றன. பொதுவாக போஸ்ட் ஆபிஸ் எஃப்.டி திட்டத்தில் ஓராண்டுக்கு 6.9 சதவீதமும், 2 ஆண்டுக்கு 7 சதவீதமும், 3 ஆண்டுக்கு 7 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
அதேநேரம் 5 ஆண்டுகால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ரூ.1.50 லட்சத்துக்குள்ளான முதலீட்டுக்கு வருமான வரிச்சட்டம் 1961ன் படி 80சி விலக்கு அளிக்கப்படுகிறது.
பிபிஎஃப் வட்டி
2023-24 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டிற்கான PPF வட்டி விகிதம் மாறாமல் 7.1 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏப்ரல் 2020 முதல் PPF வட்டி விகிதங்கள் மாறாமல் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“