அஞ்சல் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள்30 bps வரை உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய விகிதங்களின்படி, அஞ்சலகங்களில் மூன்று வருட கால வைப்புத்தொகையானது, நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 30 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து, தற்போதுள்ள 5.5 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் தற்போது 20 அடிப்படைப் புள்ளிகளாக உயர்த்தப்பட்டு 7.4 சதவீதம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மே முதல் இந்திய ரிசர்வ் வங்கி பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை 140 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது, இதனால் வங்கிகள் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களையும் உயர்த்தின.
கிசான் விகாஸ் பத்ரா (கேவிபி) திட்ட வட்டி விகிதம் 6.9% லிருந்து 7% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், கேவிபி டெபாசிட்கள் 123 மாதங்களில் முதிர்ச்சியடையும்.
தொடர்ந்து, அஞ்சல் அலுவலக 2 ஆண்டு கால வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 5.5% லிருந்து 5.7% ஆகவும், அஞ்சல மாதாந்திர வருமானக் கணக்கு திட்டத்தின் வட்டி விகிதம் 6.6% லிருந்து 6.7% ஆகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), பொது வருங்கால வைப்பு நிதி (PPF) அல்லது தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) ஆகியவற்றின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil