அஞ்சல் அலுவலக நிலையான வைப்பு அல்லது கால வைப்பு வட்டி விகிதம் ஜூலை-செப்டம்பர் 2023 காலாண்டில் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, அஞ்சலகத்தில் 1 வருட ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை நிதி அமைச்சகம் ஜூன் 30ஆம்தேதி உயர்த்தியுள்ளது. எனினும், மற்ற தவணைக்காலங்களுக்கான விகிதங்களை மாற்றவில்லை.
Advertisment
அஞ்சலக நிலையான வைப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் வட்டி விகிதத்தை மேலும் உயர்த்துவார்கள் என்று எதிர்பார்த்தனர். இருப்பினும், கடந்த காலாண்டில் பல்வேறு தவணைகளுக்கான அஞ்சல் அலுவலக நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் 0.5% வரை அதிகரிக்கப்பட்டதால் மற்றொரு உயர்வு குறைவாகவே இருந்தது. அதாவது, முன்னதாக 2023-24 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில், தபால் அலுவலக நிலையான வைப்பு வட்டி விகிதம் 7.5% வரை அதிகரிக்கப்பட்டது.
போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் முதலீட்டாளர்கள் எந்த தொகையையும் டெபாசிட் செய்ய அனுமதிக்கிறது. குறைந்தபட்சத் தொகை ரூ. 1000 ஆகும். அதன்பின்னர் ரூ.100ன் மடங்குகளில் டெபாசிட் செய்யலாம். 5 ஆண்டு கால அஞ்சலக நிலையான வைப்புத் தொகையில் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான டெபாசிட்கள் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
புதிய வட்டி விகிதம்
காலம்
வட்டி
1 ஆண்டு
6.9%
2 ஆண்டு
7%
3 ஆண்டு
7%
5 ஆண்டுகள்
7.5 %
ஜூலை-செப்டம்பர் 2023 காலாண்டு வட்டி விகிதம்
கடந்த ஆறு மாதங்களில், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) கணக்கு, கிசான் விகாஸ் பத்ரா (KVP) மற்றும் தபால் அலுவலகம் போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் அதிகரித்துள்ளது. எனினும், வட்டி விகிதம் மாற்றப்படாத ஒரே திட்டம் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“