இந்த அரசாங்கத் திட்டங்கள் சம்பளம் பெறும் வகுப்பினரிடையே வரிச் சேமிப்புக்காகவும், அவர்களின் வருமானத்திற்காகவும் பிரபலமாக உள்ளன.
வங்கி நிலையான வைப்புத்தொகையுடன் ஒப்பிடுகையில், இந்த திட்டங்கள் அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இதற்கிடையில், புதிய சிறுசேமிப்புத் திட்டமான மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழை அறிமுகப்படுத்தும் போது, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கான (SCSS) வைப்பு வரம்புகளை அதிகரிக்க நிதி அமைச்சர் பரிந்துரைத்தார்.
1) தேசிய ஓய்வூதியத் திட்டம்: தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது அரசாங்க ஓய்வூதிய முதலீட்டுத் திட்டமாகும். இதில், குறைந்த முதலீட்டுத் தொகை ரூ. 1,000 ஆகும். தற்போதைய வட்டி விகிதம் 7.1% ஆகும்.
2) பொது வருங்கால வைப்பு நிதி: பொது வருங்கால வைப்புநிதி திட்டம் 7.1% நிலையான வட்டி விகிதத்தையும் 15 வருட முதலீட்டு காலத்தையும் வழங்குகிறது.
ஒரு நிதியாண்டுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச முதலீட்டுத் தொகைகள் முறையே ரூ.500 மற்றும் ரூ.1.5 லட்சம் ஆகும்.
3) மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்: இந்தத் திட்டம் பெண் முதலீட்டாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சேமிப்புத் திட்டமாகும்.
சான்றிதழ்களை வழங்கக்கூடிய அதிகபட்ச தொகை எதுவும் இல்லை; குறைந்தபட்சத் தொகை ரூ. 1000 ஆகும். இரண்டு ஆண்டு கால திட்டமாகும். இதில், 7.5 சதவீத வட்டி கிடைக்கிறது.
4) தபால் அலுவலக ஃபிக்ஸ் டெபாசிட்டுகள்: வங்கிகளைப் போலவே, தபால் நிலையங்களும் எஃப்டிகளை வழங்குகின்றன.
தேசிய சேமிப்பு நேர வைப்புத்தொகை வங்கிகளை விட உயர்ந்தது. அவை அதிக ரிட்டனை வழங்குகின்றன.
5) தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC): சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முதலீட்டாளர்கள் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகளைப் பெறும்போது, தங்கள் மூலதனத்தை அதிகரிக்க இந்தத் திட்டத்தை ஒரு தளமாகப் பயன்படுத்தலாம்.
இது 6.8% வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளது. என்எஸ்சியின் அடிப்படை முதலீட்டு வரம்பு ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“