தபால் அலுவலகங்களில் பல்வேறு முதலீட்டு திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதில், நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்து நல்ல வருமானம் பெற விரும்புவோருக்கு கிராம சுரக்ஷா திட்டம் ஒரு சிறந்த சாய்ஸ். அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் அரசு ஊழியர்கள், நகர்ப்புற, கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச வயது 10. அதிகபட்சம் 55 வயது வரை இருக்கலாம். குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 10,000 ரூபாய், அதிகபட்ச காப்பீட்டுத் தொகை10 லட்சம் ரூபாய் ஆகும். 4 வருட முதலீட்டிற்கு பிறகு கடன் வசதி கிடைக்கும்.
5 வருடங்களுக்கு முன்னதாக பாலிசியை சரண்டர் செய்தால் போனஸ் கிடைக்காது. இந்தத் திட்டத்தில் தனிநபருக்கு பிரீமியம் செலுத்தும் விருப்பங்கள் உள்ளன. அவை 55 ஆண்டுகள், 58 ஆண்டுகள் மற்றும் 60 ஆண்டுகள் ஆகும். தற்போது, இந்தத் திட்டத்திற்கு அஞ்சல் துறை அறுபதாயிரம் ரூபாய் போனஸ் வழங்குகிறது.
ஒரு நபர் 19 வயதில் 10 லட்சம் தொகைக்கான கிராம சுரக்ஷா காப்பீட்டை வாங்கினால், 55 வருடங்களுக்கான மாதாந்திர பிரீமியம்1515 ரூபாயாக இருக்கும். 58 வருடங்களுக்கு 1463 ரூபாயாக இருக்கும். அதுவே, 60 வருடங்களுக்கு 1141 ரூபாயாக இருக்கும். 55 ஆண்டுகள் திட்டத்திற்கு முதிர்வுத் தொகை 31.60 லட்சம் ரூபாயாக இருக்கும்.
58 வருடங்களுக்கு முதிர்வு பலன் 33.40 லட்சம் ரூபாயாக இருக்கும். 60 ஆண்டுகளுக்கு முதிர்வு பலன் 34.60 லட்சம் ரூபாயாக இருக்கும். இந்த பாலிசியில் நாமினி வசதியும் உண்டு. ஒரு வாடிக்கையாளர் தங்கள் இமெயில் ஐடி அல்லது மொபைல் எண்ணைப் புதுப்பிக்க விரும்பினால், அவர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
அஞ்சல் காப்பீடு தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 180 5232/155232 என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்கலாம். இது தவிர, http://www.postallifeinsurance.gov.in/ என்றை இணையதளத்தை அணுகி மற்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil