நம்மிடையே இருக்கும் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களில் தபால் அலுவலக முதலீட்டுத் திட்டங்கள் சிறந்தவையாக உள்ளன. இவற்றில் ஆபத்து காரணி குறைவு என்பது இதன் சிறப்பம்சமாகும்.
முதலீட்டு வருமானத்தைப் பொறுத்தவரை அது அபாயத்துடன் தொடர்புடையது. ஈக்விட்டி சந்தையில் ரிஸ்க் அதிகமாக இருப்பதால், மற்ற முதலீட்டு வழிகளை விட வருமானமும் அதிகமாக இருக்கும். ஆனால், நீங்கள் பாதுகாப்பான முதலீட்டு விருப்பத்தைத் தேடுகிறீர்களானால், இந்திய தபால் அலுவலகத் திட்டங்கள் உங்களுக்குச் சிறந்தவையாக இருக்கும்.
போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் முதலீடு செய்வதில் ஆபத்து காரணி குறைவாக உள்ளது மற்றும் அதே நேரத்தில் வருமானம் நன்றாக இருக்கும். குறைந்த ரிஸ்க் மற்றும் வருமானம் நன்றாக இருக்கும் அத்தகைய திட்டங்களில் ஒன்று 'கிராம் சுரக்ஷா திட்டம்'. இந்த திட்டத்தில், நீங்கள் ஒவ்வொரு மாதமும் வெறும் 1500 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் முதிர்வு நேரத்தில் 35 லட்சம் ரூபாய் வரை பெறலாம்.
கிராம் சுரக்ஷா திட்டத்தின் கீழ், 80 வயதை அடையும் போது அல்லது மரணம் ஏற்பட்டால், எது முன்னதாக நடந்தாலும் அவர்களின் சட்டப்பூர்வ வாரிசு அல்லது நாமினிக்கு போனஸுடன் உறுதி செய்யப்பட்ட தொகை செலுத்தப்படும்.
தபால் அலுவலக கிராம் சுரக்ஷா திட்டம்
19 முதல் 55 வயது வரை உள்ள எந்த இந்திய குடிமகனும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.10,000 முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கலாம்.
இந்தத் திட்டத்தின் பிரீமியத் தொகையை மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் செலுத்தலாம்.
பிரீமியத்தைச் செலுத்த 30 நாள் சலுகைக் காலம் கிடைக்கும்.
தேவைப்பட்டால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தத் திட்டத்தில் நீங்கள் கடனும் பெறலாம்.
இந்தத் திட்டத்தை எடுத்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் விரும்பினால் சரண்டர் செய்யலாம். ஆனால் இந்த சூழ்நிலையில், உங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.
மாதம் 1500 ரூபாய் தொகையை தொடர்ந்து டெபாசிட் செய்வதன் மூலம், முதலீட்டாளர்கள் ரூ.31 முதல் 35 லட்சம் வரை பலன் பெறலாம்.
மாதம் ரூ.1500 முதலீடு செய்து ரூ.35 லட்சம் வரை பெறுவது எப்படி?
ஒருவர் 19 வயதில் கிராம் சுரக்ஷா திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கி, 10 லட்ச ரூபாய் பாலிசியை வாங்கினால், அவரது மாத பிரீமியம் 55 ஆண்டுகளுக்கு ரூ.1,515 ஆகவும், 58 ஆண்டுகளுக்கு ரூ.1,463 ஆகவும், 60 ஆண்டுகளுக்கு ரூ.1,411 ஆகவும் இருக்கும்.
பின்னர், பாலிசி வாங்கியவர் 55 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.31.60 லட்சமும், 58 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.33.40 லட்சமும், 60 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.34.60 லட்சமும் முதிர்வுப் பலனைப் பெறுவார்.
இந்த திட்டம் பற்றிய மேலும் விவரங்களை அறிய இந்தியா போஸ்ட்டின் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil