/tamil-ie/media/media_files/uploads/2020/11/maxresdefault-37.jpg)
Lic new plan lic scheme lic online
post office interest post office scheme : நீங்கள் இன்று இதில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், முதிர்ச்சி அடையும் காலத்தில் ஒரு லட்சத்திற்கு பதிலாக இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்கும். அதாவது, உங்கள் முதலீடு எந்த நேரத்திலும் இரட்டிப்பாகும்.
இந்த திட்டத்தில் உங்கள் பணத்துக்கு முழு உத்தரவாதமும் மற்றும் இரட்டிப்பாகும். நீங்கள் ஒரு முறை மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டும். கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் (Kisan Vikas Patra Scheme) முதலீடு செய்யலாம். உங்கள் சேமிப்பின் பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால், இந்த திட்டம் உங்களுக்கு சிறந்தது என்பதை நிரூபிக்க முடியும். மத்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் பணம் மூழ்கிவிடும் என்பதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், இந்த திட்டத்தில் மட்டுமே முதலீடு செய்யுங்கள். ஏனென்றால் 124 மாதங்களில் உங்கள் பணம் இரட்டிப்பாகும். அதாவது, இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள உங்கள் பணத்தை சுமார் 10 ஆண்டுகள் வைத்திருக்க வேண்டும்.
18 வயது இந்தியர் யாரும் தபால் சேமிப்பு பத்திர திட்டத்தில் முந்தலீடு செய்யலாம். ஒற்றை கணக்கு (தனது பெயரில்) மற்றும் கூட்டு கணக்கு வசதி (தந்தை/ தாய் / மனைவி) உள்ளது. இந்த திட்டத்தில் ரூ.100 முதல் ரூ .1000, ரூ .5000, ரூ 10,000 மற்றும் ரூ .50,000 வரை முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டு செய்ய வரம்பு ஏதுமில்லை. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் போது KYC செயல்முறை பின்பற்றப்படுகிறது. சேமிப்பு பத்திர திட்டத்தில் சேர்வதன் மூலம் வருமான வரி சட்டப் பிரிவு 80சி கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.