இதை கவனிச்சீங்களா? உங்க பணத்தை ‘டபுள்’ ஆக்க இத்தனை திட்டங்கள்!

Post Office investment schemes : சேமிப்பு திட்டங்கள் மற்றும் நிலையான வைப்புநிதி திட்டங்களில் வட்டி மிகவும் குறைந்த அளவே தருகின்ற நிலையில் வேறெந்த வகையில் பணத்தில் இருந்து முதலீடு பெறலாம் என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு தான் இந்த செய்தி. இருக்கவே இருக்கிறது தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள். Post Office Time Deposit இந்த டைம் டெபாசிட்டில் தபால் நிலையம் உங்களுக்கு 5.5% வட்டி தருகிறது. இதில் நீங்கள் முதலீடு செய்தால் 13 […]

Post Office Schemes

Post Office investment schemes : சேமிப்பு திட்டங்கள் மற்றும் நிலையான வைப்புநிதி திட்டங்களில் வட்டி மிகவும் குறைந்த அளவே தருகின்ற நிலையில் வேறெந்த வகையில் பணத்தில் இருந்து முதலீடு பெறலாம் என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு தான் இந்த செய்தி. இருக்கவே இருக்கிறது தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள்.

Post Office Time Deposit

இந்த டைம் டெபாசிட்டில் தபால் நிலையம் உங்களுக்கு 5.5% வட்டி தருகிறது. இதில் நீங்கள் முதலீடு செய்தால் 13 ஆண்டுகளில் உங்கள் பணம் இரட்டிப்பு ஆகும். இது 1 முதல் 3 ஆண்டுகளுக்கான சேமிப்பு திட்டமாகும். 5 ஆண்டு திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் உங்களுக்கு 6.7% வட்டி கிடைப்பதோடு 10 ஆண்டுகள் 9 மாதத்தில் உங்களின் முதலீடு இரட்டிப்பாகும்.

Post Office Savings Bank Account

இந்த திட்டத்தில் உங்களுக்கு 4% வட்டி கிடைக்கும். மேலும் 18 ஆண்டுகளில் உங்களில் சேமிப்பு கணக்கில் முதலீடு செய்யப்படும் தொகை இரட்டிப்பு அடையும்.

Post Office Recurring Deposits

வங்கிகளைப் போன்றே தபால் நிலையங்களும் ஆர்.டி. சேமிப்பு திட்டத்தை வழங்குகிறது. வட்டி 5.8% ஆகும். இதில் நீங்கள் முதலீடு செய்தால் 12 வருடங்கள் 5 மாதங்களில் உங்கள் முதலீடு இரட்டிப்பு ஆகும்.

Post Office Monthly Income Scheme

மாத வருவாய் திட்டத்தில் 6.6% வட்டி உங்களுக்கு வழங்கப்படுகிறது. 10.91 வருடங்களில் உங்களின் முதலீடு இரட்டிப்பு ஆகும்.

Post Office Senior Citizen Saving Scheme

மூத்த குடிமகன்களுக்காக வழங்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் 7.4% வட்டியை பெறலாம். மேலும் உங்களின் முதலீடு 9.73 வருடங்களில் இரட்டிப்பு ஆகும்.

Post Office PPF

தபால் அலுவலகம் அதன் பொது வருங்கால வைப்பு நிதியில் (பிபிஎஃப்) 7.1% வட்டி விகிதத்தை வழங்குகிறது, இது 15 ஆண்டு கால முதலீடாகும். இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் 10.14 ஆண்டுகளில் உங்கள் பணம் இரட்டிப்பாகும்.

Post Office Sukanya Samriddhi Account

தபால் அலுவலகம் சுகன்யா சமிர்தி சேமிப்பு திட்டம் தற்போது 7.6% வட்டி விகிதத்தை வழங்கி வருகிறது. இளம் வயதினருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த திட்டம், கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

Post Office National Saving Certificate

தபால் அலுவலகம் தேசிய சேமிப்பு சான்றிதழ் (என்.எஸ்.சி) 6.8% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது 5 ஆண்டு முதலீட்டு திட்டமாகும், இது வரி சலுகைகளையும் வழங்குகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த திட்டத்தில் உங்கள் முதலீடு கிட்டத்தட்ட 10 ஆண்டு 7 மாதங்களில் இரட்டிப்பாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Post office investment schemes that will double your money quickly

Next Story
இதனால்தான் PPF எப்பவும் பெஸ்ட்: 1% வட்டிக்கு வேறு யார் கடன் தருவாங்க?!Public provident fund Tamil News: Loan Against PPF now at 1% Interest Rate in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com