scorecardresearch

நாளொன்றுக்கு ரூ.267 சேமிப்பு: ரூ.27845 ரிட்டன்: போஸ்ட் ஆபிஸின் இந்தத் திட்டம் தெரியுமா?

எம்எஸ்எஸ்சி கணக்கில் முதலீடு செய்வதன் மூலம், ஒவ்வொரு மூன்று மாத இடைவெளிக்குப் பிறகும் 2 ஆண்டுகளுக்கு தோராயமாக ரூ. 27,845 பெறலாம்,

Post Office Mahila Samman Savings Certificate Save Rs 267 a day get Rs 27845 every 3 months for 2 years
மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டமானது போஸ்ட் ஆபிஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் கிடைக்கும்.

Post Office Mahila Samman Savings Certificate: மகிளா சம்மன் சேமிப்புச் சான்றிதழ் (MSSC) என்பது பெணகளுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக திட்டம் ஆகும்.
இந்தத் திட்டம் தபால் அலுவலகத்தில் கிடைக்கும். இதில், குறைந்தபட்சத் தொகை ரூ.1000 மற்றும் அதன் பிறகு ரூ. 100 இன் மடங்குகளில் சேமிக்கலாம்.

எனினும், நீங்கள் டெபாசிட் செய்யக்கூடிய அதிகபட்சத் தொகை ரூ. 2 லட்சம் மட்டுமே ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒரு நாளைக்கு ரூ.267 சேமித்தால், மாத இறுதியில் (30 நாள்களுக்குப் பிறகு) ரூ.8010 சேமிப்பு இருக்கும்.
அந்த வகையில் 3 மாதங்களுக்கு பிறகு, உங்கள் கையில் இருக்கும் மொத்தத் தொகை ரூ.24,030 ஆக இருக்கும். மூன்று மாதங்களுக்குப் பிறகு புதிய MSSC கணக்கில் நீங்கள் ரூ. 24000 முதலீடு செய்யலாம், இது 7.5% வட்டியைப் பெறும் மற்றும் 2 வருட முதிர்வுக் காலம் முடிந்த பிறகு தோராயமாக ரூ.27,845 உங்களுக்குக் கிடைக்கும்.

இவ்வாறு, ஒவ்வொரு காலாண்டிலும் 24,000 ரூபாயை எம்எஸ்எஸ்சி கணக்கில் முதலீடு செய்வதன் மூலம், ஒவ்வொரு மூன்று மாத இடைவெளிக்குப் பிறகும் 2 ஆண்டுகளுக்கு தோராயமாக ரூ. 27,845 பெறலாம், ஏனெனில் ஒவ்வொரு கணக்கும் மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு முதிர்ச்சியடையும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Post office mahila samman savings certificate save rs 267 a day get rs 27845 every 3 months for 2 years