Post Office Savings Scheme | Mahila Samman Savings Scheme | மத்திய அரசின் ஆதரவு பெற்ற சிறுசேமிப்புத் திட்டமான மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் என்பது இரண்டு ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் ஓர் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டமாகும்.
இந்தத் திட்டத்தில் பெண் முதலீட்டாளர்கள் தங்களின் பணத்தை முதலீடு செய்யலாம். அதன்படி, இத்திட்டத்தில் ரூ.1000 டெபாசிட் ஆனது, 2 ஆண்டுகளில் ரூ.11602 ஆக உயரும்.
அதேநேரத்தில் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக மட்டும் ரூ.32,044 கிடைக்கும். அதே வேளையில் உங்களின் முதலீடு ரூ.2,32,044 ஆக உயரும்.
மேலும் ரூ.1,25,000 முதலீடு செய்தால் ரூ.1,45,028 ஆகவும், ரூ.1,50,000 முதலீடு செய்தால் ரூ.1,74,033 ஆகவும், ரூ.1,75,000 முதலீடு செய்தால் ரூ.2,03,039 ஆகவும் வளரும்.
இந்தியா போஸ்ட் இணையதளத்தின்படி, மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் கணக்கை பெண்கள் தங்களுக்காகவோ அல்லது மைனர் பெண் குழந்தைகளுக்காகவோ திறக்கலாம்.
இந்தத் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின்போது அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தில் வரி விலக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“