Post Office Monthly Income Scheme: மிகவும் அபாயம் குறைவான முதலீட்டு சேவைகளுக்காக பலரும் தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களை பயன்படுத்துகின்றனர். ஒரு முறை முதலீடு செய்தால் மாத வருவாய் வரும் வகையில் ஒரு சேமிப்பு திட்டம் தபால் நிலையம் வழங்கி வருகிறது. Post Office MIS எனப்படும் இந்த திட்டத்தில் 10 வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளும் கூட கணக்கு துவங்க முடியும். அல்லது அவர்களின் பெயரில் நீங்கள் கணக்கு துவங்கிக் கொள்ள முடியும். ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு வரக்கூடிய வட்டியை வைத்து நீங்கள் உங்கள் குழந்தையின் கல்வித் தேவையை கூட பூர்த்தி செய்து கொள்ள இயலும்.
இந்த தபால் நிலைய சேவையை நீங்கள் எந்த அஞ்சல் அலுவலகத்தில் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ள இயலும். நீங்கள் இந்த மாதாந்திர வருவாய் திட்ட கணக்கில் குறைந்தபட்சமாக ரூ. 1000 முதலீடு செய்ய முடியும். அதிகபட்சமாக ரூ. 4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு அரசு நிர்ணயம் செய்திருக்கும் வட்டியானது 6.6% ஆகும்.
இந்த சேமிப்பு திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் 5 ஆண்டுகல் ஆகும். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான சேமிப்பு என்றால் அவர்கள் பெயரிலேயே நீங்கள் கணக்கு துவங்கலாம். இல்லை என்றால் பெற்றோர்களின் பெயர்களில் கணக்கு துவங்கிக் கொள்ளலாம்.
நீங்கள் உங்கள் குழந்தையின் பெயரில் ரூ. 2 லட்சம் இந்த சேமிப்புக் கணக்கில் முதலீடு செய்கின்றீர்கள் என்றால் உங்களுக்கு ரூ. 1100 (6.6%) வட்டி மாதம் மாதம் கிடைக்கும். 5 ஆண்டுகள் முடிவில் உங்களுக்கு ரூ. 66 ஆயிரம் வட்டி மட்டுமே கிடைக்கும்.
அதே வேளையில் நீங்கள் மாதம் ரூ. 1925 பெற வேண்டும் என்றால் உங்களின் கணக்கில் ரூ. 3.50 லட்சத்தை முதலீடாக செலுத்த வேண்டும். உங்களின் குழந்தையின் கல்விக்கு இது நிச்சயமாக உதவும் வகையில் அமையும். அதே சமயத்தில் நீங்கள் ரூ. 4.5 லட்சத்தை முதலீடாக செலுத்தினால் மாதத்திற்கு ரூ. 2475-ஐ வருவாயாக பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil