ஓய்வுக்குப் பின் மாத வருமானம் வேண்டுமா? இந்தப் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தை பாருங்க!

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் நீங்கள் ஒரு மொத்த தொகையை முதலீடு செய்து டெபாசிட் தொகையின் வட்டியிலிருந்து வழக்கமான மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறலாம்.

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் நீங்கள் ஒரு மொத்த தொகையை முதலீடு செய்து டெபாசிட் தொகையின் வட்டியிலிருந்து வழக்கமான மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறலாம்.

author-image
WebDesk
New Update
pension plans pension interest pension

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் தற்போதைய வட்டி விகிதம் குறித்து பார்க்கலாம்.

ஓய்வுக்குப் பின் நிலையான வருமானத்தை உறுதிசெய்ய நம்பகமான மூதலீடை தேடுகிறீர்களா?
அப்படியென்றால் போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமானத் திட்டம் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். இது பல்வேறு சமூகப் பொருளாதாரப் பின்னணியில் உள்ள தனிநபர்களுக்கும் அணுகக்கூடிய திட்டமாகும்.
இந்தத் திட்டத்தில் கவர்ச்சிகரமான வருமானம் மற்றும் உத்தரவாத ரிட்டன் கிடைக்கின்றன. இதனால், இந்தத் திட்டங்கள் முதலீட்டிற்கான பாதுகாப்பான வழியை வழங்குகின்றன.

Advertisment

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம், ஒருவர் மொத்த தொகையை முதலீடு செய்து, டெபாசிட் தொகையின் வட்டியிலிருந்து வழக்கமான மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெற அனுமதிக்கிறது.
அந்த வகையில், தற்போதைய 7.4 சதவீத வட்டி விகிதத்தில், இந்தத் திட்டம் மாத ஓய்வூதியமாக ரூ.9,250 பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

கூடுதலாக ஐந்து ஆண்டுகளுக்கு திட்டத்தை நீட்டிக்கவும் நீங்கள் தேர்வு செய்யலாம். மனைவியுடன் கூட்டுக் கணக்கு உள்ள முதலீட்டாளர்களுக்கு இந்தத் திட்டம் ரூ. 15 லட்சம் முதலீட்டு வரம்பை உயர்த்தி, ஆண்டுக்கு ரூ. 1,11,000 வட்டி கிடைக்க செய்கிறது.
மேலும் இந்தக் கணக்கை முன்கூட்டியே மூடிக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் டெபாசிட் செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்குப் பிறகு பகுதியளவு திரும்பப் பெறவும் விருப்பங்கள் உள்ளன.
அதேநேரத்தில், பணம் எடுக்கும் நேரத்தைப் பொறுத்து டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் இருந்து 1 முதல் 2 சதவீதம் வரை கழிக்கப்படும்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: