Advertisment

போஸ்ட் ஆபிஸ் டெபாசிட் திட்டத்தில் மாற்றம்.. 80சி வரி விலக்கு வரம்பு உயருமா?

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர டெபாசிட் உள்ளிட்டவற்றில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
Post Office Monthly Income Scheme deposit limits raised

பிரிவு 80C இன் கீழ் உள்ள விலக்கு வரம்பை, ஆண்டுக்கு ரூ.1.5 லட்சத்தில் இருந்து குறைந்தபட்சம் ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பல நிபுணர்கள் பரிந்துரைத்திருந்தனர்.

பட்ஜெட் 2023ல், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) ஆகியவற்றின் டெபாசிட் வரம்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உயர்த்தியுள்ளார்.

முன்னதாக, பிரிவு 80C இன் கீழ் உள்ள விலக்கு வரம்பை, ஆண்டுக்கு ரூ.1.5 லட்சத்தில் இருந்து குறைந்தபட்சம் ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பல நிபுணர்கள் பரிந்துரைத்திருந்தனர்.

Advertisment

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தில் (SCSS) வைப்பு வரம்பை 30 லட்சமாக உயர்த்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்

அஞ்சலக மாதாந்திர வருமானத் திட்டத்தின் கீழ் வைப்புத்தொகை வரம்பை ஒற்றைக் கணக்குக்கு ரூ.9 லட்சமாகவும், கூட்டுக் கணக்குகளுக்கு ரூ.15 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

எனினும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (செல்வ மகள் சேமிப்பு திட்டம்), பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள், தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள், நிலையான வைப்பு தொகை உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் கொண்டுவரப்படவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Nirmala Sitharaman Post Office Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment