Tamil Business Post Office Saving Scheme Update : உலகளவில் மிகப்பெரிய தொடர்பு சேவை அஞ்சல்துறை. தற்போது ஏராளமாக தொழில்நுட்பகள் மனிதனின் வேலையை எளிதாக்கினாலும், அஞ்சல்துறை இன்னும் தனது சேவையை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அஞ்சல் அலுவகலத்தில் தகவல் பரிமாற்றம் மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு தேவையாக பல சேமிப்பு திட்டங்களும் செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த திட்டங்களை பற்றி மக்களுக்கு சரிவர எதுவும் தெரிவதில்லை.
அலுவலக சேமிப்பு திட்டங்கள், மற்ற முதலீட்டு திட்டங்களை விட சிறந்தவையாக கருதப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள், இந்திய தொழிலாள வர்க்க மக்களுக்காக சிறந்த முதலீட்டுத் திட்டங்களை வழங்குகின்றன. தபால் அலுவலக திட்டங்கள் அவற்றின் ஈர்க்கக்கூடிய வட்டி விகிதங்கள் மற்றும் சிறிய முதலீட்டுத் தொகை காரணமாக மிகவும் பிரபலமாக உள்ளன.
தபால் அலுவலகம் வழங்கும் முதலீட்டு திட்டங்கள் ஆபத்து இல்லாதவை மற்றும் பல சந்தர்ப்பங்களில் சந்தை மாற்றங்களைச் சார்ந்து இருக்காது. எனவே, இது பலருக்கு நல்ல முதலீட்டு வாய்ப்பாக அமைகிறது.
தபால் அலுவலகத்தின் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்று தபால் அலுவலக மாதாந்திர முதலீட்டுத் திட்டம் (MIS). இந்த திட்டமானது, குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து, அந்தத் தொகையின் வட்டி விகிதத்தின்படி, நிலையான மாத வருமானத்தைப் பெற வழிவகை செய்கிறது. உங்களிடம் சரியான ஆவணங்கள் இருந்தால், உங்கள் அருகிலுள்ள தபால் அலுவலகம் மூலம் இந்த MIS கணக்கைத் திறக்கலாம்.
தபால் அலுவலக MIS திட்டமானது ஐந்தாண்டுகளுக்கு ஒரு நிலையான காலத்தைக் கொண்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், அதன் பிறகு உங்கள் தேவைக்கேற்ப உங்கள் பணத்தை திரும்பப் பெறலாம் அல்லது மீண்டும் முதலீடு செய்யலாம். நீங்கள் வெறும் 1000 ரூபாயை முதலீடாக கொண்டு தபால் அலுவலகத்தில் MIS கணக்கைத் திறக்கலாம்.
தபால் அலுவலக மாதாந்திர முதலீட்டுத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?
தபால் அலுவலக MIS திட்டம் குறைந்த அல்லது நடுத்தர வருமான முதலீட்டாளர்களிடையே பிரபலமானது, ஏனெனில் இது நியாயமான வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும் ரூ.1000 முதலீட்டில் இத்திட்டத்தில் சேரலாம். முதலீட்டாளர் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகையும் உண்டு. மேலும் உத்திரவாதமான வருமானமும் உண்டு.
MIS திட்டத்தில் ஒரு நபர் ரூ.4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம் அல்லது கூட்டாக ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் வட்டி சந்தை நிலவரத்தைப் பொறுத்து அரசாங்கத்தால் அமைக்கப்படுகிறது. செப்டம்பர் 30, 2021 உடன் முடிவடையும் காலாண்டில் வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணக்கீட்டின்படி, ஒரு முதலீட்டாளர் MIS திட்டத்தில் ரூ. 4 லட்சத்தை முதலீடு செய்து, ரூ. 2000 மாதாந்திர வட்டியைப் பெறலாம். ஆனால், முதிர்வு காலத்தை அடைந்தவுடன் மட்டுமே இந்தத் தொகையை திரும்பப் பெற முடியும்.
MIS திட்டத்திற்கான தகுதிகள்
இந்தியாவில் வசிப்பவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யத் தகுதியுடையவர்கள், மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் இந்தக் கணக்கைத் தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் MIS கணக்குகளை திறக்கலாம். அவர்கள் 18 வயதை அடைந்தவுடன் பலன்களைப் பெறுவார்கள்.
இந்த திட்டங்களை பயன்படுத்தி குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பயன்பெறலாம் மேலும் தங்களது எதிர்கால திட்டங்களையும் நடைமுறை படுத்தி்ககொள்ளலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.