நமமிடம் உள்ள சேமிப்பு திட்டங்களில், தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. தபால் அலுவலகங்களில் கிடைக்கும் நமது முதலீட்டிற்கான பாதுகாப்பும், நல்ல லாபமும் நம்மை தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய வைக்கின்றன. தற்போது அப்படியொரு சேமிப்பு திட்டத்தைப் பார்ப்போம்.
தபால் அலுவலகத்தின் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் (என்.எஸ்.சி) மிகவும் பாதுகாப்பான முதலீட்டு திட்டமாகும். என்.எஸ்.சி திட்டத்தில் நீங்கள் மாதத்திற்கு ரூ .100 குறைவாக முதலீடு செய்தால், சில ஆண்டுகளில் நீங்கள் கோடீஸ்வரராக மாற வாய்ப்புள்ளது.
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் (என்.எஸ்.சி) உங்கள் முதலீட்டை எந்த ஆபத்தும் இல்லாமல் பாதுகாப்பாக வைத்திருப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க உதவுகிறது. மேலும் உங்களது மற்றும் உங்கள் குடும்பத்தினரின் எதிர்காலத்தை பாதுகாப்பாக வைக்கவும் உதவுகிறது.
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தின் நன்மைகள்
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். ஆனாலும், உங்களுக்கு இடையில் பணத்தேவை ஏற்பட்டால் சில நிபந்தனைகளுடன் 1 வருடத்திற்குப் பிறகு உங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் (3 மாதங்களுக்கு ஒருமுறை) அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுகின்றன.
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்திற்கான வட்டி விகிதம்
தற்போது, இந்த திட்டத்திற்கு ஆண்டுதோறும் 5.9 சதவீத வட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் ரூ .1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். ஏனெனில், இந்த திட்டம் வருமான வரி பிரிவு 80 சி இன் கீழ் வருகிறது. எனவே வரி விலக்கு கிடைக்கிறது. தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்திற்கான வட்டி அரை ஆண்டுக்கு ஒருமுறை முதலீட்டுடன் சேர்க்கப்படுகிறது. இந்த வட்டியானது ஐந்தாண்டுகளின் முடிவில் முதலீட்டாளருக்கு வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கப்பெறும் வட்டி மீண்டும் முதலீடு செய்யப்படுவது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
இத்திட்டத்தின் முக்கிய நன்மையே முதலீட்டாளர்கள் குறைவான தொகையை கூட முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சமாக ரூ .100 முதல் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம்.
இப்போது இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சத்தை பார்ப்போம். நீங்கள் 5 ஆண்டுகளில் ரூ .15 லட்சம் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு 5.9 வட்டி விகிதத்தில் ரூ .20.06 லட்சம் உங்களுக்கு கிடைக்கும். இதில் உங்களது அசல் ரூ.15 லட்சத்திற்கு, வட்டியாக சுமார் 5.06 லட்சத்தை லாபமாக பெறுவீர்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.