Advertisment

Post Office Scheme: 5 ஆண்டுகளில் ரூ.20 லட்சம் ரிட்டன்… இந்த ஸ்கீமை பார்த்தீங்களா?

இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக மாதம் 100 ரூபாய் முதலீடு செய்து ஆரம்பிக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Post Office Scheme: 5 ஆண்டுகளில் ரூ.20 லட்சம் ரிட்டன்… இந்த ஸ்கீமை பார்த்தீங்களா?

உங்களது ஓய்வுக் காலத்தை எவ்வித சிக்கலும் இன்றி கழிக்க, பல சேமிப்பு திட்டங்கள் கைவசம் உள்ள. காப்பீட்டு நிறுவனங்கள் ஓய்வு காலத்துக்கென சில திட்டங்களை வகுத்து உங்கள் ஓய்வுக் காலத்தில் நிரந்தர வருமானத்துக்கு வழி வகுப்பவையாக உள்ளன.

Advertisment

இந்தச் சூழ்நிலையில், எங்கு பணத்தை முதலீடு செய்வது பாதுகாப்பாகவும், லாபகரமாகவும் இருக்கும் என்பது பலரது மனதில் தோன்றும் கேள்வியாகும்.

இத்தகைய கேள்விகளுக்கு சிறந்த பதிலாக நம் முன் இருப்பது தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் தான். போஸ்ட் ஆபிஸில் பணம் பாதுகாப்பாக இருப்பது மட்டுமின்றி நல்ல லாபத்தையும் நிச்சயம் பெற முடியும். மாதந்தோறும் 100 ரூபாய் செலுத்துவதன் மூலம், உங்களது ஓய்வு காலத்தில் லட்சாதிபதியாக வளம் வரலாம்.

National Saving Certificate

தபால் அலுவலகத்தில் குறுகிய கால சேமிப்பு திட்டமாக National Saving Certificate அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, குறுகிய காலத்தில் பெரும் தொகையை நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். உங்களது பணம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், இத்திட்டம் முதிர்வு அடையும் போது, எதிர்பாராத லாபத்துடன் உங்களது முதலீட்டுப் பணத்தைப் பெற முடியும்.

பலன்கள் என்னென்ன

இந்த திட்டத்தின் முதிர்ச்சி காலம், 5 ஆண்டுகளாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தேவைப்படும் பட்சத்தில் ஓராண்டு கழித்துக் குறிப்பிட்ட சில விதிமுறைகளுடன் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் முதல் காலாண்டில் அரசால் நிர்ணயிக்கப்படுகிறது.

தற்போதைய வட்டி விகிதம் என்ன?

தற்சமயம், இத்திட்டத்தின் வட்டி விகிதம் 6.8 ஆக உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், வருமான வரி பிரிவு 80 சி -யின் கீழ் ஆண்டுதோறும் 1.5 லட்சம் ரூபாய் வரி விலக்கு பெறலாம்.

முதலீடு எவ்வளவு செய்யனும்?

இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக மாதம் 100 ரூபாய் முதலீடு செய்து ஆரம்பிக்கலாம். உங்களுக்கு 5 ஆண்டுகளில் 6.8 வட்டி விகித கணக்கில் ரூபாய் 20.85 லட்சம் வேண்டுமெனில், நீங்கள் 5 ஆண்டுகளில் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்தாக வேண்டும். அப்போது தான், 5 ஆண்டில் 6 லட்சம் ரூபாய் லாபமாக கிடைத்திடும்.

Post Office Scheme Post Office Savings Scheme National Savings Certificate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment