Post Office NSC scheme: கொரோனா தொற்று ஏற்படுத்திய பெரும் அவதிகளுக்கு பிறகு மக்கள் மீண்டும் பல்வேறு திட்டங்களில் தங்களின் முதலீட்டை துவங்கியுள்ளனர். பலராலும் அதிகம் விரும்பப்படும் முதலீட்டுத் திட்டங்களை இந்தியா போஸ்ட் வழங்கி வருகிறது.
உங்கள் முதலீட்டை பாதுகாப்பாக வைப்பதுடன், ரிஸ்க் ஏதுமின்றி அதிக அளவு ரிட்டர்ன்ஸையும் தருகிறது இந்த சேமிப்பு திட்டங்கள். இப்படியான குறைவான முதலீட்டு அபாயங்கள் கொட்ண்ட திட்டம் தான் தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate (NSC) திட்டம். இது மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ள திட்டமாகும்.
இதில் முதலீடு செய்ய உச்ச வரம்பு ஏதும் இல்லை. அதே போன்று பிரிவு 80சியின் கீழ் உங்களுக்கு வருமான வரிச் சலுகையையும் பெற்றுத் தருகிறது இந்த திட்டம்.
இந்த திட்டத்திற்கான வட்டியானது 6.8% ஆக உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை உங்கள் சேமிப்பிற்கு கிடைக்கும் வட்டியும் மெச்சுரிட்டியின் போது வழங்கப்படும். நீங்கள் ரூ. 1000-த்தை முதலீடு செய்கிறீர்கள் என்றால் ஐந்து ஆண்டுகள் முடிவில் உங்களுக்கு கிடைக்கும் ரிட்டர்ன்ஸ் ரூ. 1389 ஆக இருக்கும்.
இந்தியா போஸ்ட் இணையத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்புகளின் படி நீங்கள் ரூ. 5 லட்சம் தேசிய சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் ஐந்து ஆண்டுகள் முடிவடையும் போது, ரூ.6,94,746 பணம் உங்களுக்கு ரிட்டர்ன்ஸ் கிடைக்கும். இந்த ஐந்து ஆண்டுகளில் உங்களுக்கு உங்களின் முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருவாய் ரூ. 1,94,746 ஆகும்.
ஒருவர் ரூ. 1000ம் கொண்டு கூட இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இந்த ஐந்து ஆண்டுகளில் உங்கள் கையில் கிடைக்கும் பணத்தை தொடர்ந்து முதலீடு செய்தும் இந்த திட்டத்தின் பலனை நீங்கள் அடைய இயலும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil