Advertisment

Post Office: உங்க முதலீடு 2 மடங்கு ஆகணுமா? இந்த 9 திட்டங்களில் எது பெஸ்ட்னு பாருங்க!

Best 9 post office plans to double your investment Tamil News: உங்க பணத்தை இரட்டிப்பாக்கும் 9 பெஸ்டான தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் பற்றி இங்கு காணாலாம்.

author-image
WebDesk
Apr 30, 2021 08:35 IST
Postal forms to be available in Tamil

Post Office payment bank Tamil News: தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களால் உங்களுக்கு உத்தரவாதமான வருமானத்தை வழங்க முடியும். மேலும் இந்த திட்டங்களால் நீங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை இரட்டிப்பாக்க முடியும். 

Advertisment

1. தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தில் உள்ள 1 முதல் 3 ஆண்டுகள் கால வைப்புத்தொகைக்கு தபால் அலுவலக நேர வைப்பு கணக்குகளுக்கு 5.5% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது, நீங்கள் அதில் முதலீடு செய்தால், உங்கள் பணம் சுமார் 13 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

2. தபால் அலுவலக வங்கி சேமிப்பு கணக்கு

தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு உங்கள் முதலீட்டில் 4.0 சதவீத வட்டியை மட்டுமே வழங்குகிறது. மேலும் உங்கள் பணம் 18 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

3. தபால் அலுவலக தொடர்ச்சியான வைப்பு கணக்கு (ஆர்.டி) 

தபால் அலுவலக தொடர்ச்சியான வைப்புத்தொகை கணக்கிற்கு (ஆர்.டி) 5.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது, பணம் முதலீடு செய்யப்பட்டால் அது சுமார் 12 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

4. தபால் அலுவலக மாத வருமான திட்டம்

அஞ்சல் அலுவலக மாத வருமான திட்டத்தில் (எம்ஐஎஸ்) 6.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது, பணம் முதலீடு செய்யப்பட்டால் அது சுமார் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

5. தபால் அலுவலகம் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

தபால் நிலையத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (எஸ்சிஎஸ்எஸ்) தற்போது 7.4% வட்டி செலுத்துகிறது, இது 9 ஆண்டுகளில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்குகிறது.

6. தபால் அலுவலகம் பிபிஎஃப்

தபால் நிலையத்தின் 15 ஆண்டு பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) தற்போது 7.1 சதவீத வட்டியை அளிக்கிறது, இது இந்த விகிதத்தில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க 10 ஆண்டுகள் வரை ஆகும்.

7. தபால் அலுவலகம் சுகன்யா சமிர்தி கணக்கு

தபால் நிலையத்தின் சுகன்யா சமிர்தி கணக்குத் திட்டம் 7.6% வரையான அதிக வட்டியை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் பணத்தை இரட்டிப்பாக்க 9 ஆண்டுகள் ஆகும்.

8. தபால் அலுவலகம் தேசிய சேமிப்பு சான்றிதழ்

தபால் அலுவலகத்தின் தேசிய சேமிப்பு சான்றிதழில் (என்.எஸ்.சி) 6.8% வட்டி வழங்கப்படுகிறது. இது 5 ஆண்டு சேமிப்பு திட்டமாகும். மேலும் இந்த வட்டி விகிதத்துடன் பணம் முதலீடு செய்யப்பட்டால், அது சுமார் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

9. தபால் அலுவலகம் கிசான் விகாஸ் பத்ரா

தபால் அலுவலக கிசான் விகாஸ் பத்ரா (கேவிபி) திட்டத்தில், தற்போது 6.9 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்துடன், இங்கு முதலீடு செய்யப்பட்ட தொகை 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

#Post Office Scheme #Tamil Business Update #Business Update 2 #Business #India Post Payments Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment