பொது வருங்கால வைப்பு நிதியில் ஒருவர் செய்த முதலீட்டை முதிர்வுக் காலத்திற்குப் பின் அடுத்த 15 ஆண்டுகள் நீட்டிப்பதன் மூலம் அவர் கோடீஸ்வரர் ஆகலாம். அது எவ்வாறு என்பதைப் பார்ப்போம்.
பொது வருங்கால வைப்பு நிதி அல்லது பிபிஎஃப் என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் சிறிய சேமிப்பு திட்டமாகும். இது 100 சதவீதம் ஆபத்து இல்லாதது. இது ஒரு வரையறுக்கப்பட்ட தன்னார்வ முதலீட்டு கருவியாகும். இது ஒரு முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால பணவீக்கத்தின் போது உதவுகிறது. இந்த சேமிப்பு திட்டத்தை ஒருவர் வங்கி அல்லது தபால் நிலையத்தில் தொடங்கலாம்.
முதலீடு செய்யப்பட்ட பணத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் திரும்பப்பெறும் ஒருவர் கோடீஸ்வரராக மாறலாம். இதற்கு ஒருவரின் பிபிஎஃப் கணக்கை 15 ஆண்டுகள் முதிர்வு காலத்திற்குப் பிறகும் நீட்டிக்க வேண்டும். இது தவிர ஒருவருக்கு முதலீடு செய்யப்பட்ட தொகை, பிபிஎஃப் வட்டி மற்றும் பிபிஎஃப் திரும்பப் பெறும் தொகை ஆகியவற்றிற்கு வருமான வரி விலக்கு உண்டு.
பிபிஎஃப் கணக்கு ஈஈஈ பிரிவின் கீழ் வருகிறது. அங்கு ஒருவரின் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
இது தவிர பிபிஎஃப் வட்டி வீதம் மற்றும் பிபிஎஃப் முதிர்வு தொகை எந்தவொரு வருமான வரி விலக்கிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. ஒருவர் 30 வயதில் பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்யத் தொடங்கலாம். அவர் ஒய்வு பெறும் வரை அடுத்த 30 ஆண்டுகளுக்கு பிபிஎஃப் கணக்கில் தொடர்ந்து சேமிக்க முடியும்.
இத்திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். இருப்பினும் ஒருவரின் பிபிஎஃப் கணக்கை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். பிபிஎஃப் கணக்கை நீட்டிக்க ஒரு விண்ணப்பத்தை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் எத்தனை முறை வேண்டுமானாலும் நீட்டிக்க முடியும். ஆனால் ஒவ்வொரு முறையும் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே நீட்டிக்க முடியும்.
கோடீஸ்வரர் ஆவது எப்படி?
ஒரு முதலீட்டாளர் 30 வயதில் பிபிஎஃப் கணக்கை மாதத்திற்கு ரூ.9000 (ஆண்டுக்கு ரூ.1,08,000) முதலீடு செய்வதாக கொள்வோம். 15 ஆண்டுகளில் இந்த திட்டத்தின் காலம் முடியும். ஆனால் கணக்கு வைத்திருப்பவர் அவரின் பிபிஎஃப் கணக்கை 15,20,மற்றும் 25வது ஆண்டு என மூன்று சந்தர்ப்பங்களில் நீட்டிக்கிறார் எனக் கருதுவோம். எனவே அவர் பிபிஎஃப் கணக்கில் தொடர்ந்து 30 ஆண்டுகளாக சேமிக்க முடியும்.
தற்போதைய பிபிஎஃப் கணக்கிற்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி வீதத்தை முதலீட்டின் முழு காலத்திற்கும் கருதி பிபிஎஃப் கால்குலேட்டர் (எஸ்பிஐ) ஒருவர் இறுதியில் ரூ.1,07,86,639.32 பெறுவதாக கூறுகிறது.
இந்த ரூ.1,07,86,639.32 பிபிஎஃப் முதிர்வுத் தொகையில் ஒருவருக்கு ரூ.75,46,639.32 பிபிஎஃப் வட்டி கிடைக்கும். ஆனால் அவர் 30 ஆண்டு காலத்திற்கு ரூ. 32,40,000 மட்டுமே முதலீடு செய்திருப்பார்.
பிபிஎஃப் வட்டி மற்றும் பிபிஎஃப் முதிர்வு தொகை என அனைத்துக்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்படும். எனவே ஒருவர் பிபிஎஃப் கணக்கை நீட்டிப்பதால் பிரிவு 80 சி மூலம் வருமான வரிவிலக்கு மட்டுமல்லாமல் அவருக்கு 1.11 கோடி ஓய்வூதிய நிதியை வளர்க்கவும் உதவும்.
அதேநேரம் ஒரு நபர் 15 வருடங்களுக்கு மட்டும் மாதத்திற்கு ரூ.9000 (ஆண்டுக்கு ரூ.1,08,000) முதலீடு செய்தால் பிபிஎஃப் கால்குலேட்டர் எஸ்பிஐன் படி ஒருவரின் பிபிஎஃப் முதிர்வு தொகை ரூ.28,40,111.34 மட்டுமே.
இந்த ரூ.28,40,111.34ல் ஒருவரின் பிபிஎஃப் வட்டி ரூ.12,20,111.34 ஆகவும் நிகர முதலீடு ரூ.16,20,000 ஆகவும் இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.