நம்மிடையே இருக்கும் முதலீட்டு திட்டங்களில் தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் சிறந்தவையாக கருதப்படுகிறது. அதிலும் தபால் அலுவலகத்தில் பொது வருங்கால வைப்பு நிதி சேமிப்பு திட்டம், முதலீட்டாளர்களுக்கு விருப்பமான திட்டமாக உள்ளது.
எனவே, ஒரு தனிநபர் முதலீடு செய்யத் திட்டமிட்டால், இந்திய அஞ்சல் துறையில் 15 வருட பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கு (PPF) பற்றி அறிந்திருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி கிடைப்பதால், ஒருவர் நல்ல வருமானத்தைப் பெறலாம்.
PPF இன் சிறப்பம்சங்கள்
PPF கணக்கில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ 500 முதல் ரூ 1,50,000 வரை முதலீடு செய்யலாம். இந்த டெபாசிட்களை மொத்தமாகவோ அல்லது தவணை முறைகளிலோ செய்யலாம். இந்தியக் குடிமகனாக இருக்கும் ஒருவர் இக்கணக்கினை திறக்கலாம். கணக்கு தொடங்குபவர் 18 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்கவேண்டும். மைனர் (சிறியவர்கள் அதாவது 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்) அல்லது நல்ல மனநிலை இல்லாத ஒருவர் சார்பாக அவரது பாதுகாவலர், இந்த கணக்கைத் தொடங்கலாம்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் வருமான வரிச் சட்டத்தின் 80C இன் கீழ், PPF கணக்கில் வரி விலக்கு பெறலாம். மேலும், இந்தக் கணக்கில் ஈட்டப்படும் வட்டி மற்றும் முதிர்வு வருமானம் இரண்டும் வரியற்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
PPF கணக்கு முதிர்ச்சியடைந்தவுடன் செய்ய வேண்டியது.
1) கணக்கு மூடல் படிவத்தை பாஸ்புக்குடன் சேர்த்து சம்மந்தப்பட்ட தபால் அலுவலகத்தில் சமர்ப்பித்து முதிர்வு தொகையை பெறலாம்.
2) மேற்கொண்டு டெபாசிட் எதுவும் செய்யமால் நீங்கள் உங்கள் முதிர்வு மதிப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியும், இதற்கும் PPFக்கான வட்டி விகிதம் கிடைக்கும். மேலும், எந்த நேரத்திலும் பணத்தை திரும்ப பெறலாம் அல்லது ஒவ்வொரு நிதியாண்டிலும் 1 முறை திரும்பப் பெறலாம்.
3) சம்பந்தப்பட்ட தபால் அலுவலகத்தில் பரிந்துரைக்கப்பட்ட நீட்டிப்புப் படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் உங்கள் கணக்கை மேலும் ஒவ்வொரு 5 ஆண்டுகளாக பல ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.
PPF கணக்கில் முன்கூட்டிய பணம் திரும்ப பெற செய்ய வேண்டியது
1) கணக்கு தொடங்கிய ஆண்டைத் தவிர்த்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முதலீட்டாளர் சம்பந்தப்பட்ட நிதியாண்டில் 1 முறை திரும்பப் பெறலாம்.
2) 4 வது முந்தைய ஆண்டின் இறுதியில் அல்லது முந்தைய ஆண்டின் இறுதியில், 50 சதவிகிதம் வரை கிரெடிட்டாக திரும்ப எடுக்கப்படலாம்.
இந்த திட்டம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு, indiapost.gov.in என்ற இந்திய போஸ்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil