இந்திய அஞ்சல் துறையின் கீழ் உள்ள இந்தியா போஸ்ட், பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களை வழங்குகிறது. கூடுதலாக, முதலீட்டுத் தொகையில் ஈர்க்கக்கூடிய வருமானத்தையும் வழங்குகிறது. எனவே, நீங்கள் உங்கள் பணத்தை பாதுகாப்பான முதலீட்டில் வைக்கத் திட்டமிடும் முதலீட்டாளராக இருந்தால், தபால் அலுவலகம் வழங்கும் திட்டங்களைப் பரிசீலிக்கலாம்.
உதாரணமாக, போஸ்ட் ஆபிஸ் சிறு சேமிப்புத் திட்டம், எந்த ஆபத்தும் இல்லாத திட்டமாகவும், அதிக வருமானத்தை வழங்கும் திட்டமாகவும் உள்ளது. இந்த திட்டம் முதிர்ச்சியின் போது உங்களுக்கு நல்ல வருமானத்தையும் வழங்குகிறது. வெறும் 100 ரூபாயைக் கொண்டு தபால் அலுவலக திட்டங்களில் நீங்கள் முதலீட்டைத் தொடங்கலாம்.
போஸ்ட் ஆஃபீஸ் சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் சிறந்த சேமிப்பு திட்டமாக கருதப்படுகிறது. அரசு ஆதரவுப் பெற்ற, ஆபத்து இல்லாத திட்டமாக இது உள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி என்ற திட்டத்தில், முதலீட்டாளர்கள் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் எளிதாகப் பணம் சம்பாதிக்கலாம். நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இந்த முதலீட்டுத் திட்டம் பொருத்தமான முதலீட்டுத் தேர்வாக இருக்கும்.
தற்போது, முதலீட்டாளர்கள் தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதியில் தங்கள் முதலீடுகளுக்கு 7%க்கும் மேல் வட்டி பெறுகின்றனர். முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் அல்லது மாதத்திற்கு சுமார் ரூ.12,500 வரை முதலீடு செய்யலாம். அவ்வாறு செய்வதன் மூலம் முதிர்வு நேரத்தில் நீங்கள் சில லட்சங்களை வருமானமாகப் பெறலாம்.
எனவே உங்கள் ஓய்வூதியத்திற்காக ஒவ்வொரு மாதமும் ரூ 12,500 முதலீடு செய்தால், முதிர்வு நேரத்தில் 7.1% வட்டி விகிதத்தில் சுமார் ரூ 40 லட்சம் பெறலாம். கணக்கீடுகளின்படி, 15 ஆண்டுகளில் உங்களின் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சமாக இருக்கும், அதே நேரத்தில் முதலீட்டுக்கான வட்டி ரூ.18.18 லட்சமாக இருக்கும்.
தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதியில் ஒருவர் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். 18 வயதுக்கு மேற்பட்ட எவரும், PPF திட்டத்தில் சேமிக்கத் தொடங்க அஞ்சல் அலுவலகத்தில் தங்கள் கணக்குகளைத் திறக்கலாம். இந்த திட்டத்திற்கு, வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் முதலீட்டாளர்கள் வரிச் சலுகைகளையும் பெறலாம்.
இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் ஒரு வருடத்தில் ஒரு முறை திரும்பப் பெற அனுமதிக்கப்படுவார்கள். மேலும், எப்போது வேண்டுமானலும் நீங்கள் உங்கள் முழு சேமிப்பையும் திரும்பப் பெறலாம். முதிர்வு நேரத்தில் வட்டியுடன் சேர்த்து முதலீடு செய்யப்பட்ட தொகையைப் பெற உங்கள் கணக்கை மூடுவதற்கு கணக்கு மூடல் படிவத்தை சம்பந்தப்பட்ட கிளையில் சமர்ப்பிக்க வேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil