/indian-express-tamil/media/media_files/2025/03/03/Vu5uGfX2cDvLZilC4Pq8.jpg)
பி.பி.எஃப் என்பது பொது வருங்கால வைப்பு நிதியைக் குறிக்கிறது. இது அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு நீண்ட கால முதலீடு மற்றும் சேமிப்புத் திட்டமாகும். பாதுகாப்பு, உத்தரவாதமான வருமானம் மற்றும் வரி சலுகைகள் ஆகியவற்றை வழங்குவதால் முதலீட்டாளர்களிடையே விருப்பமான திட்டமாக பி.பி.எஃப் அமைகிறது.
வேலை செய்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள் அல்லது ஓய்வூதியம் பெறுபவர்கள் உட்பட எந்தவொரு நபரும் பி.பி.எஃப் கணக்கைத் திறக்கலாம். நாடு முழுவதும் உள்ள ஏதேனும் ஒரு அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கியில் மட்டும் பி.பி.எஃப் கணக்கை திறக்க முடியும்.
1. ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ. 500 எனவும், அதிகபட்சமாக ரூ. ரூ. 1.50 லட்சம் ஆகவும் இதில் முதலீடு செய்யலாம்.
2. கணக்கு திறக்கப்பட்ட நிதியாண்டைத் தவிர்த்து, 15 நிதியாண்டுகளுக்குப் பிறகு இந்த தொகை முதிர்வடையும்.
திட்டம் முதிர்வடைந்ததும் என்ன செய்ய வேண்டும்?
1. கணக்கு மூடல் படிவத்தை நிரப்பி, உங்கள் பாஸ்புக்குடன் சமர்ப்பித்து உங்கள் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
2. நீங்கள் முதிர்வுத் தொகையை கணக்கில் போட்டு விட்டு வட்டியைப் பெறலாம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த பணத்தை எடுக்கலாம் அல்லது வருடத்திற்கு ஒரு முறை கூட பணம் எடுக்கலாம்.
3. கணக்கு முதிர்வடைந்த ஒரு வருடத்திற்குள், அஞ்சல் அலுவலகத்தில் நீட்டிப்பு படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் உங்கள் பி.பி.எஃப் கணக்கை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.
பி.பி.எஃப் கணக்கிலிருந்து எவ்வளவு பணம் எடுக்கலாம்?
கணக்கு திறக்கப்பட்ட ஆண்டைத் தவிர்த்து, கணக்கு திறக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு நிதியாண்டில் ஒரு முறை பணம் எடுக்க முடியும்.
உதாரணத்திற்கு ரூ. 5000ஐ இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்கு எவ்வளவு வருமானம் வரும் என்று பார்க்கலாம்.
அந்த வகையில், ரூ. 5000 ஆயிரம் என்ற விகிதத்தில் ஆண்டுக்கு எடுத்துக் கொண்டால் ரூ. 60000-ஐ முதலீடு செய்திருப்பீர்கள். இதனை 18 ஆண்டுகளுக்கு எடுத்துக் கொள்ளும் போது. ரூ. 10,80,000 கிடைக்கும். இதற்காக 7.1 சதவீதம் வட்டி என்ற அடிப்படையில் பார்க்கும் போது ரூ. 11,25,878 கிடைக்கும். இதன் முதிர்வுத் தொகை ரூ. 22,05,878 என்ற அளவில் இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.