recurring-deposit-account | post-office-savings-scheme | போஸ்ட் ஆஃபீஸ் RD திட்டம் தற்போது வைப்பாளர்களுக்கு 6.2% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது, ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்தத் திட்டத்தில் அனுமதிக்கப்படும் குறைந்தபட்ச முதலீடு மாதத்திற்கு ரூ 100 அல்லது ரூ 10 இன் மடங்குகளில் ஏதேனும் ஒரு தொகை ஆகும்.
மேலும், இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யக்கூடிய தொகைக்கு அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. தபால் அலுவலக RD திட்டத்தில் உள்ள வைப்புத்தொகைகள் கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து 5 ஆண்டுகளில் (60 மாதாந்திர வைப்புகளுக்குப் பிறகு) முதிர்ச்சியடையும்.
தபால் அலுவலக இணையதளத்தின்படி, சம்பந்தப்பட்ட தபால் அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதன் மூலம் கணக்கை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க அனுமதி உண்டு.
ரூ.5 ஆயிரம் ஆர்.டி
தபால் அலுவலக RD திட்டத்திற்கு மாதாந்திர பங்களிப்பு 5000 ரூபாய் என்றால் 5 ஆண்டுகளில் 3.52 லட்சம் கார்பஸ் கிடைக்கும் என்று கணக்கீடு காட்டுகிறது. கணக்கை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்தால், 10 ஆண்டுகளில் மொத்த கார்ப்பஸ் ரூ.8.32 லட்சமாக இருக்கும்.
ரூ.1000 பங்கீடு
தபால் அலுவலக RD திட்டத்திற்கு மாதாந்திர பங்களிப்பு 1000 ரூபாய் என்றால் 5 ஆண்டுகளில் 70,431 லட்சம் கார்பஸ் கிடைக்கும் என்று கணக்கீடு காட்டுகிறது. கணக்கை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்தால், 10 ஆண்டுகளில் மொத்த கார்ப்பஸ் ரூ.1.66 லட்சமாக இருக்கும்.
வங்கி ஆர்.டி முதலீடு
தற்போது முன்னணி வங்கிகள் வழங்கும் RD வட்டி விகிதங்கள் தபால் அலுவலக RD விகிதத்தை விட அதிகமாக உள்ளது. உதாரணமாக, எஸ்பிஐ 7.1% வரை RD விகிதத்தை வழங்குகிறது, அதே நேரத்தில் HDFC வங்கி பொது குடிமக்களுக்கு 7% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“