நடப்பாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் அஞ்சலக ஆர்.டி. (RD) வட்டி விகிதத்தை 30 அடிப்படை புள்ளிகள் (bps) 6.5 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
வங்கியை பொறுத்தவரை ஆர்.டி. வட்டி விகிதங்கள் மாறுபடும். இந்த நிலையில், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற சிறந்த வங்கி ஆர்டி விகிதங்களுக்கு இடையேயான ஒப்பீடு இங்கே உள்ளது.
தொடர் வைப்புத்தொகைக்கு யார் சிறந்த வட்டி விகிதத்தை வழங்குகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
அஞ்சல ஆர்.டி திட்டங்கள்
போஸ்ட் ஆபிஸில் 5 ஆண்டு ஆர்.டி திட்டங்கள் உள்ளன. இந்த காலாண்டில் வழங்கப்படும் வட்டி விகிதம் 6.5% ஆகும்.
எஸ்பிஐ வங்கி
எஸ்பிஐ வங்கி 1 ஆண்டு முதல் 2 ஆண்டு வரையிலான ஆர்.டி. சேமிப்புகளுக்கு 5.10 சதவீதம் வட்டி வழங்குகிறது.
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு, வட்டி விகிதம் 5.20 சதவீதமாக உள்ளது.
அதேபோல், 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு, வங்கி 5.45 சதவீதத்தை வழங்குகிறது. 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நீண்ட கால முதலீட்டுக்கு, எஸ்பிஐ 5.50 சதவீதத்தை வழங்குகிறது. குறைந்தபட்ச வைப்பு காலம் 12 மாதங்கள் ஆகும். அதிகபட்ச வைப்பு காலம் 120 மாதங்களாக உள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி 4.75 முதல் 7.10 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் முதலீட்டு காலத்துக்கு ஏற்ப மாறுபடும்.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ஹெச்.டி.எஃப்.சி வங்கியும் 4.75 சதவீதம் முதல் 7.10 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
யெஸ் வங்கி
யெஸ் வங்கியை பொறுத்தமட்டில் வட்டி விகிதங்கள் 6.10 சதவீதத்தில் இருந்து தொடங்கி 7.75 சதவீதம் ஆக உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“