ஆர்.டி வட்டி விகிதங்கள் டிசம்பர் காலாண்டில் உயர்த்தப்பட்டன. அதே நேரத்தில் மற்ற அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களும பழைய நிலையில் தொடர்கின்றன.
மேலும் ஃபிக்ஸட் டெபாசிட் போலவே, தொடர் வைப்புத்தொகைகளும் (RDs) மக்கள் மத்தியில் பிரபலமான முதலீட்டு திட்டங்களாக உள்ளன.
இதுமட்டுமின்றி, தொடர் வைப்புத் திட்டம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிலையான மாதாந்திர வைப்புத்தொகை மூலம் சேமிப்பை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
போஸ்ட் ஆபிஸ் ஆர்.டி vs எஸ்.பி.ஐ ஆர்.டி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வட்டி விகிதங்கள்
ஐந்தாண்டு தொடர் வைப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை டிசம்பர் காலாண்டில் 6.5 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாக அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
எஸ்.பி.ஐ ஆர்.டி வட்டி விகிதங்கள்
எஸ்பிஐ 5.75% முதல் 7% வரையிலான வட்டி விகிதத்தில் ஒரு வருடம் முதல் பத்து ஆண்டுகள் வரை முதிர்ச்சியடைகிறது. இந்த வட்டி விகிதங்கள் பிப்ரவரி 15, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.
ஹெச்.டி.எஃப்.சி வட்டி விகிதங்கள்
ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி ஆறு மாதங்கள் முதல் பத்து வருடங்களில் முதிர்ச்சியடையும் RD களுக்கு 4.50%-7% வரையிலான வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஜனவரி 24, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.
முதிர்ச்சி காலம்
எஸ்பிஐ ரெக்கரிங் டெபாசிட்டுகள் 1 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்வு காலத்தைக் கொண்டுள்ளன. HDFC வங்கி ஆறு மாதங்கள் முதல் 120 மாதங்கள் (10 ஆண்டுகள்) வரையிலான RD ஐ வழங்குகிறது. அஞ்சல் அலுவலகம் RD களை 5 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்குகின்றன.
மேலும், எஸ்பிஐ அல்லது ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி ஆர்.டி (RD) கணக்கை காசோலை/பணம் மூலம் திறக்கலாம். ஆனால் தபால் அலுவலகத்தில் RD கணக்கை பணமாக மட்டுமே திறக்க முடியும்.
வரி விலக்கு
1961 இன் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் வங்கி RD இல் உள்ள முதலீடுகளுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை.
இருப்பினும், 5 வருட அஞ்சல் அலுவலக கால வைப்புத்தொகை வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்குக்குத் தகுதியுடையது.
எனினும், அஞ்சல் அலுவலகம் டிடிஎஸ் முதலீட்டாளர்களுக்கு ₹1.5 லட்சம் வரையிலான வரிச் சேமிப்பை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“