2023-24 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டிற்கான 5 ஆண்டு அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத்தொகையின் (RD) வட்டி விகிதம் ஜூன் 30ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டம் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. தற்போது ஆர்.டி. திட்டங்களின் வட்டி விகிதம் 6.2% லிருந்து 6.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பொதுவாக தபால் அலுவலக ஆர்.டி திட்டத்தில் ரூ.100 முதலே முதலீடு செய்யலாம். மேலும் இந்தக் கணக்கை நீட்டித்துக் கொள்ளலாம்.
இதற்கிடையில், மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ், செல்வ மகள் சேமிப்புத் திட்டம், கிஷான் விகாஸ் பத்ரா, போஸ்ட் ஆபிஸ் டெபாசிட் ஸ்கீம், பிபிஎஃப் உள்ளிட்ட திட்டங்களுக்கு வட்டி உயர்த்தப்படவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“