scorecardresearch

ரூ10 ஆயிரம் முதலீடு… ரூ16 லட்சம் வருமானம் – போஸ்ட் ஆபீஸின் சூப்பர் ஸ்கீம்

போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி அதிக வட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், குறைந்தப்பட்ச முதலீடாக 100 ரூபாயும், அதிகப்பட்ச முதலீடாக எந்த வரம்பும் கிடையாது.

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு மிக அவசியமான ஒன்றாக உள்ளது. திரும்பிய பக்கம் எல்லாம் சேமிப்பு திட்டங்கள் இருப்பதால், அவற்றில் பாதுகாப்பானதை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். அதற்கு சிறந்த ஆப்ஷன் தபால் அலுவலக சேமிப்பு தான்.

வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்வதை போல், தபால் அலுவலகத்தில் உள்ள ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திலும் நல்ல பலனை பெறலாம்

சாம்பாதிக்கும் பணத்தில் மாதந்தோறும் குறைந்த அளவிலான கட்டணத்தை வங்கி கணக்கில் செலுத்தி சேமிக்க விரும்பினால், போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் சிறந்த சாய்ஸ் ஆகும்.

போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி அதிக வட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், குறைந்தப்பட்ச முதலீடாக 100 ரூபாயும், அதிகப்பட்ச முதலீடாக எந்த வரம்பும் கிடையாது.

இந்த திட்டத்தில் 5.8 சதவீதம் வட்டி கிடைக்கிறது. இதில், ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி தொகை வாடிக்கையாளரின் கணக்கில் செலுத்தப்படுகிறது.

உதாரணமாக, நீங்கள் மாதம் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்தால், 5.8 சதவீதம் வட்டித் தொகை செலுத்தப்படும். அதன்படி, 10 ஆண்டுகளில் உங்கள் கணக்கின் இருப்பு ரூ16 லட்சத்தை எட்டிவிடும். ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி கிடைக்கப்பெறுவதால், முதலீட்டுக்கு நல்ல வருமானத்தை பெற முடிகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Post office recurring deposit scheme benefits