பொது மக்களின் சேமிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்கப் பல முதலீட்டுத் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் வங்கிக்கு பிறகு அதிக மக்களால் பயன்படுத்தப்படுவது அஞ்சல் சேமிப்பு திட்டம் ஆகும்.
Post Office Saving Scheme:வங்கியை விட அதிக லாபம்!
தபால் அலுவலகங்களில் வங்கிகள் போன்றே பல சேமிப்புக் கணக்குகள் உள்ளது. அதுவும் வங்கிகளில் 3.5 சதவீதம் மட்டுமே லாபம் அளிக்கும் நிலையில் தபால் அலுவலகம் 4 சதவீதம் லாபத்தினைத் தனிநபர் மற்றும் ஜாயிண்ட் சேமிப்புக் கணக்குகளுக்கு அளிக்கிறது. வங்கிகளில் இருக்கும் சிறப்பான 5 சேமிப்பு திட்டங்கள் பற்றி நீங்கள் கட்டாயம் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை.
1. வங்கி அலுவலக சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்ச இருப்புத் தொகை 500 ரூபாய் வைத்துக் கணக்கை துவங்கும் போது செக் புக் மற்றும் டெபிட் கார்டு போன்றவற்றையும் பெற முடியும்.
2.சேமிப்புக் கணக்குகளில் பணத்தினை டெபாசிட் செய்ய மற்றும் எடுக்க அருகில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலமாகச் செய்ய முடியும்.
3.போஸ்ட் ஆப்பிஸ் டைம் டெபாசிட் கணக்கில் ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
4. 1 வருட சேமிப்பு கணக்கிற்கு 6.9% வட்டி விகிதம், 2 வருட சேமிப்பு கணக்கிற்கு 7.0% வட்டி விகிதம், 3 சேமிப்பு கணக்கிற்கு 7.2% வட்டி விகிதம், 5 வருட சேமிப்பு கணக்கிற்கு 7.8% வட்டி விகிதம், அதிகபட்ச டெபாசிட் வரம்பு என்று ஏதுமில்லை. 5 வருட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.
5. தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்ட கணக்கிற்கு 7.3 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது.
6.ஒரு கணக்கில் அதிகபட்சம் 4.5 லட்ச்ம் வரை டெபாசிட் செய்யலா. இதுவே ஜாயிண்ட் கணக்கு என்றால் 9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். ஜாயிண்ட் கணக்கு திறக்கும் போது இருவரும் ஒரே சம நிலையான முதலீட்டினை செய்ய வேண்டும். முதிர்வு காலம் 5 வருடம். ஒரு வருடத்திற்குப் பிறகு தேவைப்பட்டால் முன்கூடியே பணத்தினை எடுத்துக்கொள்ளலாம்.
7. பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 8 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5,00 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.