Post Office Saving Scheme : உங்களின் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் தபால் நிலையங்களில் செய்யும் முதலீடு சிறந்த ஒன்றாக இருக்கும். உங்களின் பணமும் உங்களின் முதலீட்டினால் உங்களுக்கு கிடைக்கும் ரிட்டர்ன்ஸூம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் ஒன்றான போஸ்ட் ஆஃபிஷ் ரெக்குரிங் டெபாசிட் அப்படியான பாதுகாப்பான ரிட்டர்ன்ஸை உங்களுக்கு வழங்குகிறது.
Post Office Recurring Deposit Account என்ற திட்டம் அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்படும் திட்டமாகும். நீங்கள் மிகச்சிறந்த முதலீடுகளை தவணை முறையில் செலுத்த உங்களின் சேமிப்பிற்கு சிறந்த வட்டி விகிதங்களையும் தபால் நிலையங்கள் தருகின்றன. இந்த திட்டத்தில் நீங்கள் ரூ. 100 செலுத்தி கூட முதலீட்டினை துவங்கலாம். அதே சமயத்தில் உச்ச வரம்பு முதலீட்டு அளவு என்று எதுவும் இல்லை.
வங்கிகளில் 6 மாதம், ஒரு வருடம், 2 வருடங்கள் மற்றும் மூன்று வருடங்கள் என்று ரெக்குரிங் டெபாசிட் திட்டங்கள் இருக்கிறது. ஆனால் தபால் நிலையங்களில் 5 ஆண்டுகள் ரெக்குரிங் கணக்குகள் மட்டும் துவங்க முடியும். ஒவ்வொரு காலாண்டிலும் வருடாந்திர விகிதத்தில் வட்டி கணக்கிடப்படும். ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் உங்களின் கணக்கில் அந்த பணம் சேமிக்கப்படும்.
வட்டி விகிதம்
தற்போது தபால் நிலையத்தில் சேமிக்கப்படும் ரெக்குரிங்க் முதலீட்டிற்கான வட்டியானது 5.8% ஆக உள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு காலாண்டிலும் இதற்கான வட்டியை மத்திய அரசு உறுதி செய்கிறது.
ரூ. 10 ஆயிரம் முதலீடு செய்தால் உங்களுக்கு கிடைக்கும் ரிட்டர்ன் என்ன தெரியுமா?
நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 10 ஆயிரத்தை 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 5.8% வட்டியில் ரூ. 16 லட்சத்தை பெற முடியும்.
இதனை நினைவில் கொள்ளுங்கள்
நீங்கள் ஒவ்வொரு மாதமும் முறையாக ரெக்குரிங் டெபாசிட்டில் பணத்தை செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் அப்படி பணம் செலுத்த மறந்துவிட்டால் 1% வரை அபாராதம் செலுத்த வேண்டும். 4 தவணைகள் தொடர்ச்சியாக நீங்கள் பணம் செலுத்தவில்லை என்றால் உங்களின் கணக்கு மூடப்பட்டுவிடும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil