முதலீட்டை இரட்டிப்பாக்கும் சேமிப்பு திட்டங்கள்; சூப்பரான வட்டி விகிதங்களுக்கு தபால் நிலையம் கேரண்ட்டி

அதே போன்று 5 ஆண்டு திட்டங்களை தேர்வு செய்தால் உங்களுக்கு 6.7% வரை வட்டி கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் 10.75 ஆண்டுகளிலேயே முதலீட்டை இரண்டு மடங்காக திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

Post office saving schemes

Post office saving schemes: பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா போன்ற இக்கட்டான சூழல்கள் வருகின்ற நிலையில் நம்முடைய சேமிப்பு பணம் எவ்வளவு உதவிகரமாக இருந்தது என்பதை நாம் நன்றாகவே உணர்ந்திருப்போம். சிறப்பான லாபத்தை வழங்கும் சேமிப்பு திட்டங்களுக்கு வங்கிகளுக்கு ஏறி இறங்க வேண்டாம். உங்கள் வீட்டின் அருகிலேயே இருக்கும் தபால் நிலையங்கள் உங்களுக்கு மிக உதவிகரமாக இருக்கும். எப்படி என்று கேட்கின்றீர்களா? உங்களுக்கான பதில்கள் இங்கே

Post Office Time Deposit

ஒரு ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கான சேமிப்பு திட்டமாகும். இதில் நீங்கள் உங்கள் பணத்தை சேமிக்க துவங்கினால் 5.5% வரை வட்டி பெற முடியும். இந்த திட்டத்தில் நீங்கள் 13 ஆண்டுகள் முதலீடு செய்தால் உங்களின் முதலீடு இரட்டிப்பாக மாறிவிடும் என்பதற்கு தபால் நிலையங்கள் கேரண்டி அளிக்கின்றன. அதே போன்று 5 ஆண்டு திட்டங்களை தேர்வு செய்தால் உங்களுக்கு 6.7% வரை வட்டி கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் 10.75 ஆண்டுகளிலேயே முதலீட்டை இரண்டு மடங்காக திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

Post Office Savings Bank Account

நீங்கள் சேமிப்பு கணக்கு திட்டம் மூலம் சேமிக்க துவங்கினால் உங்களுக்கு கிடைக்கும் வட்டியானது 4.0% ஆக இருக்கும். உங்களின் முதலீடு இரட்டிப்பு அடைய நீங்கள் 18 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

Post Office Monthly Income Scheme

தபால் நிலையம் மாதாந்திர சேமிப்பு திட்டம் மூலம் நீங்கள் முதலீடு செய்தால் நீங்கள் ஆண்டுக்கு 6.6% வட்டியை பெற முடியும். மேலும் 10.91 ஆண்டுகளில் உங்களின் முதலீட்டை இரட்டிப்படைய செய்யலாம்.

Post Office Senior Citizens Savings Scheme

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் இதுவாகும். தற்போது இந்த திட்டத்தில் 7.4% வட்டியை வழங்குகிறது இந்த திட்டம். உங்களின் பணம் 9 ஆண்டுகளில் இரட்டிப்படையும் வாய்ப்பினை இந்த சேமிப்பு திட்டம் வழங்குகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Post office saving schemes double your money in a few years

Next Story
தங்கத்தில் முதலீடு செய்யலாம்; ஆனால் இந்த 6 விஷயங்கள் மிகவும் முக்கியம்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com