Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

Post Office Savings Account: இன்டர்நெட் பேங்கிங் வசதியை ரெஜிஸ்டர் செய்து ஆக்டிவேட் பண்ணுவது எப்படி?

Department of Post (DOP) Internet Banking: நீங்கள் உங்கள் சேமிப்புக் கணக்கு பாஸ்புக்கின் முதல் பக்கத்தில் அச்சிடப்பட்ட CIF ஐடியான வாடிக்கையாளர் ஐடியாக பயன்படுத்தி உள்ளே செல்ல வேண்டும்

Written by WebDesk

Department of Post (DOP) Internet Banking: நீங்கள் உங்கள் சேமிப்புக் கணக்கு பாஸ்புக்கின் முதல் பக்கத்தில் அச்சிடப்பட்ட CIF ஐடியான வாடிக்கையாளர் ஐடியாக பயன்படுத்தி உள்ளே செல்ல வேண்டும்

author-image
WebDesk
29 Nov 2019 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 29 Nov 2019 18:47 IST

Follow Us

New Update
India Post internet, mobile banking:

India Post internet, mobile banking:

Post Office Net Banking Registration And Activation: உங்கள் சேமிப்பு வங்கி கணக்கு இருப்பு அல்லது உங்கள் நிலையான வைப்புகளில் அதிக வட்டி பெற நீங்கள் விரும்பினால், தபால் அலுவலகம் சிறிய சேமிப்பு திட்டங்கள் பெஸ்ட் எனலாம். தற்போது, பெரும்பாலான அஞ்சல் அலுவலக முதலீடுகளான டைம் டெபாசிட்ஸ், என்.எஸ்.சி, பிபிஎஃப், கேவிபி ஆகியவை வங்கிகள் தரும் நிலையான வைப்பு போன்ற பிற பாதுகாப்பான தயாரிப்புகளை விட அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றன.

Advertisment

ஒரு வழியா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் அகிற்ச்சி..

மேலும், தபால் அலுவலக சேமிப்பு வங்கி (பிஓஎஸ்பி) கணக்கு இணைய வசதிகளையும் வழங்குகிறது, இதைப் பயன்படுத்தி நீங்கள் பணப் பரிவர்த்தணை மட்டும் தான் செய்ய முடியும் என நினைத்துவிட வேண்டாம்.  உங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டே முதலீடும் செய்யலாம்.

Advertisment
Advertisements

தபால் துறையின் இணைய பேங்கிங் வசதி பெறுவது எப்படி?

சிங்கிள் அக்கவுன்ட் அல்லது ஜாயின்ட் B சேமிப்பு கணக்கு ஆக்டிவ் செய்ய வேண்டும்

KYC ஆவணங்கள்

மொபைல் எண்

மின்னஞ்சல் முகவரி

பான் எண்

E-Banking செயல்படுத்தும் விண்ணப்ப படிவம்

தபால் அலுவலக E-Banking செயல்படுத்தும் விண்ணப்ப படிவம் அல்லது இணைய வங்கி படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய, 'ஏடிஎம் கார்டு / இணையம் / மொபைல் / எஸ்எம்எஸ் வங்கி சேவை கோரிக்கை படிவத்தை' பதிவிறக்கம் செய்ய இந்தியா போஸ்ட் வலைத்தளத்தைப் பயன்படுத்தலாம்

தபால் அலுவலக Internet Bankingல் பதிவு செய்வது எப்படி?

தபால் அலுவலக இணைய பேங்கிங் வசதியைப் பெற, ஒருவர் தபால் அலுவலக கிளைக்கு ஒரு முறை சென்று, நிரப்பப்பட்ட தபால் அலுவலக Internet Banking படிவத்தை, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். தபால் அலுவலக இணைய வங்கி செயல்படுத்தப்பட்ட பிறகு மொபைலில் எஸ்எம்எஸ் Alert பெறுவீர்கள்.

தபால் அலுவலக Internet Banking-ஐ எவ்வாறு செயல்படுத்துவது?

எஸ்எம்எஸ் கிடைத்ததும், தபால் அலுவலக Internet Banking-ஐ பயன்படுத்த, https://ebanking.indiapost.gov.in தளத்தை பார்வையிட வேண்டும், பின்னர் ‘புதிய பயனர் செயல்படுத்தல்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இங்கே, நீங்கள் உங்கள் சேமிப்புக் கணக்கு பாஸ்புக்கின் முதல் பக்கத்தில் அச்சிடப்பட்ட CIF ஐடியான வாடிக்கையாளர் ஐடியாக பயன்படுத்தி உள்ளே செல்ல வேண்டும். கணக்கு ஐடி என்பது உங்கள் சேமிப்பு கணக்கு எண் ஆகும்.

நிதி பரிமாற்றம் மற்றும் வைப்பு

கணக்கு செயல்படுத்தப்பட்டதும், நீங்கள் ஒரு POSB இலிருந்து மற்றொரு கணக்கிற்கு பணப் பரிமாற்றம் செய்யலாம். மேலும், தபால் அலுவலக கிளைக்குச் செல்லாமல், உங்கள் பிபிஎஃப் கணக்கிலோ அல்லது தபால் அலுவலகம் தொடர்ச்சியான வைப்புத்தொகை (ஆர்.டி) கணக்கிலோ பணத்தை டெபாசிட் செய்யலாம். நீங்கள் ஆர்.டி அல்லது டைம் டெபாசிட்டில் முதலீடு செய்ய விரும்பினாலோ, அவற்றை மூடவும் நினைத்தாலும் கூட, Internet Banking மூலமாகவும் இதைச் செய்யலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!