Post Office Net Banking Registration And Activation: உங்கள் சேமிப்பு வங்கி கணக்கு இருப்பு அல்லது உங்கள் நிலையான வைப்புகளில் அதிக வட்டி பெற நீங்கள் விரும்பினால், தபால் அலுவலகம் சிறிய சேமிப்பு திட்டங்கள் பெஸ்ட் எனலாம். தற்போது, பெரும்பாலான அஞ்சல் அலுவலக முதலீடுகளான டைம் டெபாசிட்ஸ், என்.எஸ்.சி, பிபிஎஃப், கேவிபி ஆகியவை வங்கிகள் தரும் நிலையான வைப்பு போன்ற பிற பாதுகாப்பான தயாரிப்புகளை விட அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றன.
ஒரு வழியா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் அகிற்ச்சி..
மேலும், தபால் அலுவலக சேமிப்பு வங்கி (பிஓஎஸ்பி) கணக்கு இணைய வசதிகளையும் வழங்குகிறது, இதைப் பயன்படுத்தி நீங்கள் பணப் பரிவர்த்தணை மட்டும் தான் செய்ய முடியும் என நினைத்துவிட வேண்டாம். உங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டே முதலீடும் செய்யலாம்.
தபால் துறையின் இணைய பேங்கிங் வசதி பெறுவது எப்படி?
சிங்கிள் அக்கவுன்ட் அல்லது ஜாயின்ட் B சேமிப்பு கணக்கு ஆக்டிவ் செய்ய வேண்டும்
KYC ஆவணங்கள்
மொபைல் எண்
மின்னஞ்சல் முகவரி
பான் எண்
E-Banking செயல்படுத்தும் விண்ணப்ப படிவம்
தபால் அலுவலக E-Banking செயல்படுத்தும் விண்ணப்ப படிவம் அல்லது இணைய வங்கி படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய, 'ஏடிஎம் கார்டு / இணையம் / மொபைல் / எஸ்எம்எஸ் வங்கி சேவை கோரிக்கை படிவத்தை' பதிவிறக்கம் செய்ய இந்தியா போஸ்ட் வலைத்தளத்தைப் பயன்படுத்தலாம்
தபால் அலுவலக Internet Bankingல் பதிவு செய்வது எப்படி?
தபால் அலுவலக இணைய பேங்கிங் வசதியைப் பெற, ஒருவர் தபால் அலுவலக கிளைக்கு ஒரு முறை சென்று, நிரப்பப்பட்ட தபால் அலுவலக Internet Banking படிவத்தை, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். தபால் அலுவலக இணைய வங்கி செயல்படுத்தப்பட்ட பிறகு மொபைலில் எஸ்எம்எஸ் Alert பெறுவீர்கள்.
தபால் அலுவலக Internet Banking-ஐ எவ்வாறு செயல்படுத்துவது?
எஸ்எம்எஸ் கிடைத்ததும், தபால் அலுவலக Internet Banking-ஐ பயன்படுத்த, https://ebanking.indiapost.gov.in தளத்தை பார்வையிட வேண்டும், பின்னர் ‘புதிய பயனர் செயல்படுத்தல்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இங்கே, நீங்கள் உங்கள் சேமிப்புக் கணக்கு பாஸ்புக்கின் முதல் பக்கத்தில் அச்சிடப்பட்ட CIF ஐடியான வாடிக்கையாளர் ஐடியாக பயன்படுத்தி உள்ளே செல்ல வேண்டும். கணக்கு ஐடி என்பது உங்கள் சேமிப்பு கணக்கு எண் ஆகும்.
நிதி பரிமாற்றம் மற்றும் வைப்பு
கணக்கு செயல்படுத்தப்பட்டதும், நீங்கள் ஒரு POSB இலிருந்து மற்றொரு கணக்கிற்கு பணப் பரிமாற்றம் செய்யலாம். மேலும், தபால் அலுவலக கிளைக்குச் செல்லாமல், உங்கள் பிபிஎஃப் கணக்கிலோ அல்லது தபால் அலுவலகம் தொடர்ச்சியான வைப்புத்தொகை (ஆர்.டி) கணக்கிலோ பணத்தை டெபாசிட் செய்யலாம். நீங்கள் ஆர்.டி அல்லது டைம் டெபாசிட்டில் முதலீடு செய்ய விரும்பினாலோ, அவற்றை மூடவும் நினைத்தாலும் கூட, Internet Banking மூலமாகவும் இதைச் செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.