/tamil-ie/media/media_files/uploads/2020/11/maxresdefault-10.jpg)
post office savings account post office : வங்கி சேமிப்பு கணக்குகளை விட குறைந்த அளவு இருப்புத் தொகை வைத்து இருந்தால் போதும் என்பதால் அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்குகள் கவர்ச்சிகரமான ஒன்றாக இருந்தது வந்தது. வங்கி சேமிப்பை விட பலரும் இப்போது அஞ்சல் சேமிப்பு கணக்கில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், அஞ்சல் சேமிப்பில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியான தகவல் இதோ..
இதுவரை அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்குகளுக்குக் குறைந்தபட்ச இருப்புத் தொகை 50 ரூபாயாக இருந்து வந்தது.டிசம்பர் மாதம் 11-ம் தேதி முதல் இதை 500 ரூபாயாக உயர்த்துவதாக அஞ்சல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஒருவேலை இந்த 500 ரூபாய் என்ற குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்வகிக்கவில்லை என்றால், ஆண்டுக்கு 100 ரூபாய் என அபராதம் விதிக்கப்படும். நாளடைவில் அந்த சேமிப்பு கணக்கே மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள் பெரும்பாலானவர்கள், முதியோர் பென்ஷன், விதவை பென்ஷன் போன்றவற்றை வைத்துள்ளவர்கள். அவர்களுக்கு வரும் பென்ஷனை பெற மட்டுமே அந்த கணக்கை பயன்படுத்தி வருகிறார்கள்.
இப்படி அவர்களின் சேமிப்பு கணக்குகளுக்கு, 500 ரூபாயாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகையை உயர்த்தும்போது மிகப் பெரிய நிதி நெருக்கடியில் அவர்கள் சிக்குவார்கள். எனவே அதை 50 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்தினால் நன்றாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us