அஞ்சல் துறை பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், 2022-23 நிதியாண்டின் நான்காவது காலாண்டிற்கான பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை ஜனவரி 1 முதல் மார்ச் 21, 2023 வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
அந்த வகையில், கால வைப்புத்தொகை, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், மாத வருமானத் திட்டம், தேசிய சேமிப்புச் சான்றிதழ், கிசான் விகாஸ் பத்ரா ஆகியவற்றின் வட்டி விகிதங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.
புதிய வட்டி விகிதங்கள்
- மூத்த குடிமக்கள் சேமிப்புக் கணக்கு 7.6% இல் இருந்து 8% அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.
- செல்வ மகள் சேமிப்பு (சுகன்யா சம்ரித்தி யோஜனா) திட்டத்தில் தற்போது 7.6% வட்டி வழங்கப்படுகிறது.
- மாதாந்திர வருமானத் திட்டக் கணக்கின் வட்டி விகிதம் 6.7%லிருந்து 7.1% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டு தேசிய சேமிப்புச் சான்றிதழின் வட்டி விகிதம் 6.8%லிருந்து 7% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
- கிசான் விகாஸ் பத்ரா மீதான வட்டி விகிதம் இப்போது 7.2% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னர் இது 123 மாதங்களில் முதிர்ச்சி அடையும். தற்போது இதன் முதிர்ச்சி காலம் 120 மாதங்களாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/