post office account post office savings : இந்தியா போஸ்ட் என்ற பெயரில் அஞ்சல் சேவைகள் நாடு முழுவதும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் சேமிப்புத் திட்டங்களும் பொதுமக்களுக்குப் பெரிதும் பயனளிப்பவையாக உள்ளன. கொரோனா போன்ற இக்கட்டான சமயங்களில் வேலை இல்லாத சூழல் ஏற்படும் போது சேமிப்புப் பணம் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே அஞ்சலக சேமிப்பு அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இது ஆபத்து இல்லாத முதலீடாகவும் கருதப்படுகிறது.
இந்தியாவின் முதன்மை வங்கிகள் ஆண்டுக்கு 3.5 சதவீத லாபம் அளிக்கும் நிலையில், இதில் 4 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும். இதுவும் வங்கிக் கணக்கு போன்ற சேமிப்புக் கணக்கு தான். வெறும் 20 ரூபாய் இருந்தால் இந்தச் சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம். குறைந்தபட்ச இருப்புத் தொகை 50 ரூபாய். இணையதள வங்கிச்சேவை மற்றும் செக் புக் போன்ற சேவைகளும் கிடைக்கும்.
2. 5 வருட அஞ்சலக தொடர் வைப்பு நிதி (Recurring Deposit): இதில் 5 வருட அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் கணக்கில் முதலீடு செய்தால் 7.3 சதவீத வட்டி விகித இலாபம் கிடைக்கும். மேலும் மாதம் 10 ரூபாய் முதலீட்டில் அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் கணக்கை தொடங்க முடியும்.
3. அஞ்சலக டெர்ம் டெபாசிட்: இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 200 ரூபாய் முதல் டெபாசிட் செய்து சேமிப்பைத் தொடங்க முடியும். வங்கிகளின் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தையும் அஞ்சலகத்தில் டெர்ம் டெபாசிட் பெயரில் பெறலாம். இந்தத் திட்டத்தில் ஒரு வருடம் முதல் 3 ஆண்டுகள் வரை 7 சதவீதமும், 5 வருடம் முதலீடு செய்யும் போது 7.8 சதவீத லாபத்துடன் வரி விலக்கும் கிடைக்கும்.
4) அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம்: இந்த திட்டம்,மாதாந்திர வருவாய் திட்டம் எனப்படுகின்றது. இதில் 1,500 ரூபாய் முதல் 4.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இது 5 வருடத்திற்குப் பிறகு 7.3 சதவீத லாபத்துடன் ஒவ்வொரு மாதமும் தவணை முறையில் திரும்பப் பெற முடியும். இதுவே ஜாயிண்ட் கணக்காக இருந்தால் அதிகட்சம் 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
5. மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்: இதில், 55 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் முதலீடு செய்ய முடியும் என்பதோடு அதில் 8.7 சதவீத லாபமும் கிடைக்கும். குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய முடியும்.
6. பிபிஎப்: PPF திட்டத்தில் முதலீடு செய்யும் போது 8 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும். குறைந்தபட்சம் ஆண்டுக்கு 12 தவணையில் 500 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.