இந்தியா போஸ்ட் வங்கி, இணையதள வங்கி சேவையைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் தேவைப்பட்டால் இணையதள வங்கி சேவையைப் பெற்று வங்கிகளுக்கு இணையான சேவை பெறலாம்.
இந்தியா போஸ்ட் இணையதள வங்கி சேவையில் அஞ்சல் அலுவலகங்களின் ரெக்கரிங் டெபாசிட், பிபிஎஃப், ஃபிக்சட் டெபாசிட் போன்ற சேவைகளையும் பெற முடியும்.
ஏற்கனவே இந்தியா போஸ்ட் வங்கி கணக்கை வைத்துள்ளவர்கள் மீண்டும் அடையாள ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் பான் கார்டு எண் போன்றவற்றை அஞ்சல் அலுவலகத்தில் சமர்ப்பித்து இணையதள வங்கி சேவைக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தியா போஸ்ட் ஆன்லைன் வங்கி சேவையைப் பெறுவது எப்படி?
1) சாதாரண சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு கிளைக்குச் சென்று இணையதள வங்கி சேவைக்கான விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
2) விண்ணப்பத்துடன் சேர்த்த அடையாள ஆவணம் மற்றும் பான் கார்டு நகலையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
3) இணையதள வங்கி சேவைக்கான கோரிக்கை வெற்றிகரமாகச் செயல்பட்ட பிறகு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.4) பின்னர் எஸ்எம்எஸ் மூலம் உங்களுக்குக் கிடைத்த இணைப்பை கிளிக் செய்து புதிய பயனர் ஆக்டிவேஷன் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். இந்தப் படியைச் செய்யும் போது வங்கி கணக்குப் பாஸ்புக்கில் உள்ள வாடிக்கையாளர் ஐடி அல்லது CIF ஐடி அல்லது கணக்கு ஐடி கட்டாயம்.
5) பின்னர் அங்குக் கேட்கப்படும் விவரங்களை உள்ளிட்டு இணையப் படிவத்தைப் பூர்த்திச் செய்யும் போது இந்தியா போஸ்ட் வங்கி கணக்கிற்கான இணையதள வங்கி சேவை எளிமையாகச் செயல்படத் தொடங்கிவிடும்.