/tamil-ie/media/media_files/uploads/2020/12/202010251645240199_Tamil_News_Chief-Minister-Edappadi-Palanisami-inquired-about-DuraiKannu_SECVPF.jpg)
post office savings post office account
post office savings post office account interest : இந்திய அரசால் இந்தியா போஸ்ட் என்ற பெயரில் அஞ்சல் சேவைகள் நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகின்றன. அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் சேமிப்புத் திட்டங்களும் பொதுமக்களுக்குப் பெரிதும் பயனளிப்பவையாக இருக்கின்றன.
கொரோனா போன்ற இக்கட்டான சமயங்களில் வேலை இல்லாத சூழல் ஏற்படும் போது சேமிப்புப் பணம் பெரிதும் உதவியாக இருக்கும். இந்நிலையில், அஞ்சல சேமிப்புத் திட்டத்தில் சேமிப்புக்கான கட்டுப்பாடுகளில் , சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை உயர்த்துவதற்கு இந்த ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், அஞ்சலகங்களில் உள்ள சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை ஐம்பது ரூபாயாக இருந்தது. இதை 2019ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 500 ரூபாயாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த விதிமுறை கடந்த ஆண்டின் டிசம்பர் 12ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.
இருப்புத் தொகையை ரூ.500 ஆக உயர்த்தாத நபர்களுக்கு அபராதக் கட்டணமாக அவர்களது சேமிப்புக் கணக்கிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 100 ரூபாய் கழிக்கப்படும். இது நீடிக்கும் பட்சத்தில் இருப்புத் தொகை குறைக்கப்பட்டு சேமிப்பு கணக்கு காலாவதி ஆகிவிடும். எனவே, அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவர்கள் சேமிப்புக் கணக்கின் இருப்புத் தொகையை ரூ.500 ஆக உயர்த்திக்கொள்ள வேண்டும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us