Post Office savings scheme gives upto Rs.20 lakh return: தபால் அலுவலகம் முதலீட்டாளர்களுக்கு விரும்பத்தக்க வகையில் வருவாயை வழங்கும் பல பாதுகாப்பான திட்டங்களை வழங்குகிறது. முதலீட்டாளர்கள் தங்களின் எதிர்காலத்தை, குறிப்பாக ஓய்வூதியத்தைப் பாதுகாப்பதற்காக அஞ்சல் அலுவலகம் வழங்கும் பல்வேறு திட்டங்களில் தங்கள் பணத்தைப் சேமித்து வருகிறார்கள்.
இப்படியான தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களில் ஒன்று பொது வருங்கால வைப்பு நிதி (PPF). இந்த திட்டம் முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை நகர்வுகளால் பணத்தை இழக்கும் ஆபத்து இல்லாத சிறந்த திட்டமாகும். மேலும் இந்த திட்டத்தில், தினசரி ரூ.150 சேமித்தால் முதிர்வு நேரத்தில் ரூ. 20 லட்சத்தைப் பெற முடியும்.
தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதியில் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். இருப்பினும், முதிர்வு நேரத்தில் நீங்கள் ரூ. 20 லட்சத்தைப் பெற விரும்பவிட்டால், ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் வரம்பை இரண்டு முறை நீட்டிக்க முடியும்.
தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உங்களுக்கு வரிச் சலுகைகளையும் உண்டு. தற்போது, இந்தத் திட்டத்தில் ஆண்டுதோறும் 7.1 சதவீத வட்டியை வழங்கப்படுகிறது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் உங்கள் முதலீடு அதிகரித்து வருவதால், உங்கள் பணமும் உயரும்.
ரூ.20 லட்சம் ரிட்டன் எப்படி?
நீங்கள் 25 வயதில் உள்ளீர்கள் மேலும், மாதம் 35,000 ரூபாய் சம்பாதிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதியில் மாதத்திற்கு சுமார் ரூ.4500 முதலீடு செய்ய வேண்டும். அதாவது நீங்கள் ஒரு நாளைக்கு சுமார் ரூ.150 முதலீடு செய்ய வேண்டும். இது ஒரு வருடத்தில் ரூ.54,000 ஆகும்.
20 ஆண்டுகளில் உங்கள் முதலீடு ரூ.10.80 லட்சமாக இருக்கும். இதனுடன் கூட்டு வட்டியையும் சேர்த்து, முதிர்வு நேரத்தில் சுமார் ரூ.20 லட்சத்தைப் பெறுவீர்கள். மேலும், வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் நீங்கள் வரிச் சலுகைகளையும் பெறலாம்.
திட்டத்தில் ரூ.2.5 லட்சம் வரை தள்ளுபடி பெறலாம். மேலும், PPF-ல் முதலீடு செய்வது 'EEE' வகையின் கீழ் வருவதால், PPF இல் சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வுத் தொகையும் வரி இல்லாதது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.