Advertisment

Post Office: முதலீடு இரட்டிப்பு, 7.1% வட்டி - PPF திட்டம் பற்றி தெரியுமா?

இந்த திட்டத்தில் ஒருவர் ஆண்டுக்கு குறைந்தப்பட்சம் 500 ரூபாய் முதல் அதிகப்பட்சம் ஒன்றரை லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Post Office: முதலீடு இரட்டிப்பு, 7.1% வட்டி - PPF திட்டம் பற்றி தெரியுமா?

இந்திய தபால் துறை சேமிப்பு திட்டங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.அதில் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பானதாகவும், நிறைய லாபமும் கிடைக்கிறது.

Advertisment

இன்றைய காலகட்டத்தில் போஸ்ட் ஆஃபிஸ் திட்டங்களில் அதிகம் விரும்பப்படுவது பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund Account) திட்டம் தான். இந்த திட்டத்தில் பயனாளர்களுக்கு 7.1 சதவீதத்தில் வட்டி தொகை கிடைக்கிறது. இந்த திட்டம் தொடர்பான விரிவான தகவலை indiapost.gov.in தளத்தில் காணலாம்.

திட்டத்தின் முதலீட்டு வரம்பு

இந்த திட்டத்தில் ஒருவர் ஆண்டுக்கு குறைந்தப்பட்சம் 500 ரூபாய் முதல் அதிகப்பட்சம் ஒன்றரை லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த முதலீடானது மொத்தமாகவோ அல்லது தவணை முறையிலோ செலுத்தலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15ஆண்டுகள் ஆகும்.

முதிர்வு காலம் வந்த பிறகு என்ன செய்யலாம்?

வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ், PPF கணக்கில் வரி விலக்கு மூலம் பயனடையலாம். இந்தக் கணக்கு முதிர்ச்சியடைந்தவுடன், பணத்தை பெறுவதில் சில விருப்பங்களை பயனாளர்கள் மேற்கொள்ளலாம்.

  1. முதிர்ச்சி காலம் வந்தவுடன், கணக்கை மூடுவதாக பாஸ்புக்கை சமர்ப்பித்து, முதிர்வு கட்டணத்தை எடுக்கலாம்
  2. முதலீடு செய்வது நிறுத்தவிட்டு, பணத்தை பிபிஎப் கணக்கில் வைத்து கொள்ளலாம். அதற்கான வட்டி ஆண்டுதோறும் செலுத்தப்படும். அதிலிருக்கும் பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால், ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே எடுத்திட முடியும்.
  3. வேண்டுமானால், சம்பந்தப்பட்ட போஸ்ட் ஆபிஸை அணுகி, கணக்கை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளலாம்.

பணம் எடுக்கும் முறை

பணம் எடுக்கையில், கீழே குறிப்பிட்டுள்ள தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

  1. கணக்கு தொடங்கிய ஆண்டைத் தவிர்த்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பயனாளர் ஒரு நிதியாண்டிற்கு ஒரு முறை பணத்தை திரும்பப் பெறலாம்.
  2. 4 வது முந்தைய ஆண்டின் இறுதியில் திரும்பப் பெறுவதற்கான தொகை 50 சதவிகிதம் வரை கிரெடிட்டில் எடுக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, ஆர்வமுள்ள நபர்கள் indiapost.gov.in என்ற இந்திய போஸ்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்வையிடலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Post Office Scheme Savings Scheme Ppf Post Office Savings Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment