பெண் குழந்தைகளின் பெற்றோரை இலக்காகக் கொண்ட இந்திய அரசின் சிறப்பு முதலீட்டு திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், உங்கள் மகளின் எதிர்காலத்தை நீங்கள் பாதுகாக்க முடியும். பெண் குழந்தை சேமிப்பு திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா 80 சி கீழ் வருமான வரி சலுகையையும், 7.6 சதவீத வட்டி வீதத்தையும் வழங்குகிறது.
உங்கள் மகளின் வயது 10 வயதுக்குக் குறைவாக இருந்தால், நீங்கள் இந்த சுகன்யா சம்ரிதி யோஜனாவில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ் ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ரூ .250 முதல் ரூ .1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கிகள் மூலம் தொடங்கி கொள்ளலாம்.
சுகன்யா சமிர்தி திட்டத்தில் வரி சலுகைகள்
இந்த திட்டக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எந்தவொரு தொகையும் 80 சி பிரிவின் கீழ் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் முதிர்வு மற்றும் வட்டித் தொகைக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.பெண் குழந்தையானது 18 வயதை அடைந்த பிறகே திரும்ப பெற முடியும். ஆனால் அதுவும் நிலுவையில் 50% தொகையினை குழந்தையின் கல்விச் செலவினங்களுக்காக பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு 18 வயது நிரம்பியதற்கான சான்று அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் அளிக்க வேண்டும்.ஒரு வேளை உங்களது சுகன்யா சம்ரிதி கணக்கினை இடையில் தொடராவிட்டால், 15 வருடங்கள் கழித்து வட்டியுடன் திரும்ப பெற முடியும்.
சுகன்யா சமிர்தி திட்டத்தின் வட்டி விகிதம்
இதற்கான வட்டி விகிதம் ஏப்ரல் - ஜூன் 2020 நிலவரப்படி 7.6% ஆகும். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் காலண்டுக்கு ஒரு முறை அரசால் மாற்றம் செய்யப்படும். இது முதலீட்டுக்கு பங்கமில்லாமல், கணிசமான லாபத்தினை கொடுப்பதால், பெண் குழந்தைகளின் வருங்காத்திற்கு உதவியாக இருக்கும்.
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் முதிர்வு
21 ஆண்டுகள் நிறைவடையும் போது SSY திட்டம் முதிர்ச்சியடைகிறது. முதிர்ச்சியடைந்ததும், நிலுவைத் தொகை, கணக்கில் நிலுவையில் உள்ள வட்டியுடன், கணக்கு வைத்திருப்பவருக்கு செலுத்தப்படும். முதிர்ச்சியடைந்த பின்னர் SSY கணக்கு மூடப்படாவிட்டால், மீதமுள்ள தொகை தொடர்ந்து வட்டி சம்பாதிக்கும். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், 21 வயது காலம் முடிவதற்குள் பெண் குழந்தை திருமணமானால் கணக்கு தானாகவே மூடப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.