Advertisment

Post Office News: இத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பு லாபம்; இந்தத் திட்டங்களை கவனித்தீர்களா?

தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இரட்டிப்பு லாபத்தை தருகின்றன. அவை எந்தெந்த திட்டங்கள் என்பது இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Post Office News: இத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பு லாபம்; இந்தத் திட்டங்களை கவனித்தீர்களா?

Post Office savings schemes doubled your money details here: முதலீட்டுக்கு பாதுகாப்பு மற்றும் நல்ல வருமானம். இதுதான் பெரும்பாலான முதலீட்டாளர்கள் விரும்புவது. சேமிக்க விரும்புபவர்களுக்கு தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் நல்ல வருமானத்தை தருவதோடு, முதலீட்டுக்கு பாதுகாப்பையும் அளிக்கின்றன. அத்தகைய தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் பற்றி இப்போது பார்ப்போம்.

Advertisment

தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கின்றன, அதாவது உங்கள் பணம் இங்கு மூழ்காது. தபால் அலுவலகத்தின் இதுபோன்ற பல சேமிப்பு திட்டங்களில், நீங்கள் பணத்தை முதலீடு செய்தால், விரைவில் உங்கள் பணம் இரட்டிப்பாகும். எந்தெந்த திட்டத்தில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை அறியலாம்.

தபால் அலுவலக தேசிய சேமிப்பு சான்றிதழ்

தற்போது, ​​தபால் அலுவலகத்தின் தேசிய சேமிப்புச் சான்றிதழில் (NSC) 6.8% வட்டி வழங்கப்படுகிறது. இது 5 வருட சேமிப்பு திட்டமாகும், இதில் முதலீடு செய்வதன் மூலம் வருமான வரியையும் சேமிக்க முடியும். இந்த வட்டி விகிதத்தில் பணத்தை முதலீடு செய்தால், அது சுமார் 10.59 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

தபால் அலுவலகம் சுகன்யா சம்ரித்தி கணக்கு

தபால் அலுவலகத்தின் சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டமானது தற்போது அதிகபட்சமாக 7.6% வட்டி விகிதத்தைப் பெறுகிறது. பெண் குழந்தைகளுக்காக நடத்தப்படும் இந்தத் திட்டத்தில், பணத்தை இரட்டிப்பாக்க சுமார் 9.47 ஆண்டுகள் போதும்.

தபால் அலுவலக மூத்த குடிமக்கள் திட்டம்

தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு (SCSS) தற்போது 7.4% வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் உங்கள் பணம் சுமார் 9.73 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

PPF

தபால் அலுவலகத்தின் 15 ஆண்டு கால பொது வருங்கால வைப்பு நிதிக்கு (PPF) தற்போது 7.1% வட்டி வழங்கப்படுகிறது. அதாவது, இந்த விகிதத்தில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க சுமார் 10.14 ஆண்டுகள் ஆகும்.

இதையும் படியுங்கள்: பிளாட்பார்ம் டிக்கெட்டில் பயணம் செய்யலாம்; ரயில்வேயின் சூப்பர் வசதி

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) தற்போது 6.6% வட்டியைப் பெறுகிறது, இந்த வட்டி விகிதத்தில் பணத்தை முதலீடு செய்தால், அது சுமார் 10.91 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

தபால் அலுவலக சேமிப்பு வங்கி கணக்கு

உங்கள் பணத்தை தபால் நிலைய சேமிப்புக் கணக்கில் வைத்திருந்தால், பணம் இரட்டிப்பாக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஏனெனில் அதற்கு 4.0 சதவீத வட்டி மட்டுமே கிடைக்கும், அதாவது 18 ஆண்டுகளில் தான் உங்கள் பணம் இரட்டிப்பாகும்.

தபால் அலுவலகம் தொடர் வைப்பு

தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகைக்கு (RD) தற்போது 5.8% வட்டி வழங்கப்படுகிறது, எனவே இந்த வட்டி விகிதத்தில் பணத்தை முதலீடு செய்தால், அது சுமார் 12.41 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

தபால் அலுவலக நேர வைப்பு

1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரையிலான போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்டுக்கு (டிடி) 5.5% வட்டி கிடைக்கிறது. இதில் முதலீடு செய்தால் சுமார் 13 ஆண்டுகளில் உங்கள் பணம் இரட்டிப்பாகும். இதேபோல், நீங்கள் 5 வருட கால வைப்புத்தொகைக்கு 6.7% வட்டி பெறுகிறீர்கள். இந்த வட்டி விகிதத்தில் பணத்தை முதலீடு செய்தால், சுமார் 10.75 ஆண்டுகளில் உங்கள் பணம் இரட்டிப்பாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Post Office Savings Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment