Post office savings schemes : பல நேரங்களில் வங்கி சேவைகளைக் காட்டிலும் அதிக அளவு வட்டி மற்றும் ரிட்டர்ன்ஸ் தரும் திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள். ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒரு முறை நிதி அமைச்சகம் தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றி அறிவிக்கிறது.
முதலீடு செய்வதற்கு மிகவும் எளிமையானதாகவும் அதே நேரத்தில் நீண்ட நாட்களுக்கான சேமிப்புகளுக்கு அதிக அளவில் திட்டங்கள் இருப்பதாலும் மக்கள் தபால் நிலையங்களில் சேமிப்பு திட்டங்களை துவங்குகின்றனர். இந்தியாவில் மொத்தம் 1.55 லட்சம் தபால் நிலையங்கள் உள்ளன. எனவே மக்கள் மிக எளிதில், மிக அருகில் தபால் நிலையங்களில் சேமிப்பு திட்டங்களை துவங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தபால் நிலையங்கள் வழங்கும் சேமிப்புத் திட்டங்கள் என்னென்ன?
தபால் நிலைய சேமிப்பு திட்டம்
5 ஆண்டுகளுக்கான ஆர்.டி.
டைம் டெபாசிட் அக்கௌண்ட்
மாதாந்திர வருவாய் திட்டம்
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்
பி.பி.எஃப். திட்டம் (15 ஆண்டுகள்)
தேசிய சேமிப்பு பத்திரம்
கிஷான் விகாஸ் பத்திரம்
சுகன்யா சம்ரித்தி கணக்கு (SSA)
சேமிப்பு திட்டங்களை துவங்குவது எப்படி?
உங்களுக்கு அருகே இருக்கும் தபால் நிலையத்திற்கு செல்லவும்
நீங்கள் எந்த திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கை துவங்க வேண்டுமோ அதற்கான படிவத்தை பெறுங்கள். இதனை நீங்கள் இணையத்தில் தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
அதில் கேட்கப்பட்டிருக்கும் தரவுகளை வழங்கவும். பிறகு உங்களின் அடையாள சான்று மற்றும் புகைப்படம் ஆகியவற்றை வழங்கவும்.
உங்களின் சேமிப்புத்திட்டத்திற்கான குறைந்த பட்ச முதலீட்டு தொகையை உள்ளீடாக செலுத்தி கணக்கை துவங்கவும். இது மிகவும் எளிமையானது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil