மக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் தபால் துறை!

இதன் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான சேமிப்பு திட்டத்தை தேர்வு செய்து அதன் மூலம் பயன் பெறலாம்.

Post office savings schemes : டைம் டெபாசிட் (Time deposit), மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் (Senior citizen saving scheme), பப்ளிக் ப்ரொவிடெண்ட் ஃப்ண்ட் (Public provident fund), நேஷனல் சேமிப்பு (National savings certificate) ஆகிய திட்டங்கள் தபால் அலுவகங்கள் மற்றும் வங்கிகளால் வழங்கப்பபட்டு வருகின்றது.

தபால் அலுவலகத்தில் சேமிப்பு வைத்திருக்கும் நபர் சேமிப்பு திட்டத்தின் மூலம் வருடத்திற்கு ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும்.

டைம் டெபாசிட்

அதில் டைம் டெபாசிட் திட்டத்தில் 3 வருடம் வரை முதலீடு செய்பவர்களுக்கு வட்டி விகிதம் 7 %. அதாவது 3 வருடத்திற்கு 7 % வட்டியுடன் முதலீட்டைப்பெறுவதன் மூலம் பயனடைவர். இதில் 5 வருடத்திற்கு முதலீடு செய்பவர்களுக்கு 7.8 %வட்டி கிடைக்கும்.

இதற்கான வட்டி காலாண்டிற்கு கணக்கிடப்பட்டு ஆண்டின் முடிவில் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு 1961-ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்தின் 80-வது பிரிவின்கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தில் இணைய விரும்புகிறவர்கள் 60 வயதிற்கும் மேற்பட்டவராக இருக்க வேண்டும். வருமான வரி விலக்கு உள்ள இந்த திட்டத்தில் வருடத்திற்கு 8.7 % வட்டி வழங்கப்படுகிறது. முதலில் மார்ச் 31/செப்டம்பர் 30/டிசம்பர் 30 இவற்றில் எதாவதொரு தேதியில் வழங்கப்படும் வட்டி, அதன் பிறகு மார்ச் 31/ ஜுன் 30/ செப்டம்பர் 30/ டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் ஏதாவதொரு தேதியில் வழங்கப்படும்.

15 வருட சேமிப்புத் திட்டம்

இதில் கணக்கு தொடங்குவதற்கு குறைந்தபட்சம் ரூ. 500 வைப்புத்தொகை செலுத்த வேண்டும். ரூ. 100 செலுத்தி தொடங்கப்படும் கணக்கிற்கு 8 % வட்டி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான சேமிப்பு திட்டத்தை தேர்வு செய்து அதன் மூலம் பயன் பெறலாம்.

மேலும் படிக்க : பிக்சட் டெபாசிட் செய்ய நல்ல வங்கியை தேடுகிறீர்களா? அப்ப நீங்கள் செல்ல வேண்டிய வங்கி இதுதான்!

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close