போஸ்ட் ஆபீஸில் சேமிக்கப் போறீங்களா? இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

india post payments bank: இந்திய தபால் அலுவலக வங்கியின் வெவ்வேறு கணக்கு வகைகளுக்கான கட்டணங்கள் குறித்த புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

Post office savings tamil news: இந்திய தபால் அலுவலக வங்கியின் வெவ்வேறு கணக்கு வகைகளுக்கான கட்டணங்கள் குறித்த புதிய விதி வெளியிடப்பட்டுள்ளன. இவை அடுத்த மாதம் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய விதிகள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்றும், இது குறித்த மேலதிக விபரங்கள் விரைவில் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று இந்திய போஸ்ட் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆகவே இந்திய தபால் அலுவலக வங்கி கொண்டு வந்துள்ள இந்த புதிய கட்டண விதிகள் உங்களுக்கு ஏமாற்றைத்தைக் கொடுக்கலாம். அதேவேளையில் புதிய விதிப்படி, உங்கள் தபால் அலுவலகக் கணக்கில் இருந்து பணத்தை டெபாசிட் செய்வதற்கும் திரும்பப் பெறுவதற்கும் இந்திய தபால் அலுவலக வங்கி கூடுதல் பணம் வசூலிக்க முடிவு செய்துள்ளன.

இந்த நிலையில் இந்த புதிய கட்டணம் வெவ்வேறு வகையான கணக்குகளுக்கு ஏற்ப மாறுபடும் என்றும் கூறப்படுகிறது. அந்த கட்டண மற்றங்களைப் பற்றி இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.

Post office savings tamil news: இந்திய தபால் அலுவலக வங்கி அடிப்படை சேமிப்புக் கணக்கு கட்டணம்

இந்த சேமிப்புக் கணக்கில், ஒரு மாதத்தில் நான்கு முறை வரை பணத்தை எடுக்க எந்த கட்டணமும் இல்லை. இதற்குப் பிறகு, ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் திரும்பப் பெறப்பட்ட மொத்த தொகையில் ரூ .25 அல்லது 0.50 சதவீதம் வசூலிக்கப்படும். இருப்பினும், பணத்தை டெபாசிட் செய்யும் போது நீங்கள் எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை. கூடுதல் கட்டணம் செலுத்தாமல் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம்.

இந்திய தபால் அலுவலக வங்கியின் சேமிப்பு கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு கட்டணங்கள்

அடிப்படை சேமிப்புக் கணக்கைத் தவிர, உங்களிடம் சேமிப்புக் கணக்கு அல்லது நடப்புக் கணக்கு இருந்தால், ஒவ்வொரு மாதமும் ரூ .25,000 வரை மட்டுமே எடுக்க முடியும். அதற்கு மேல் நீங்கள் எடுக்க விரும்பினால், ஒவ்வொரு பரிவர்த்தனைகும் குறைந்தபட்சம் ரூ .25 அல்லது பரிவர்த்தனை செய்யப்பட்ட மொத்தத் தொகையில் 0.50 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

நீங்கள் மாதந்தோறும் ரூ .10,000 வரை ரொக்கமாக வங்கியில் செலுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படாது.இருப்பினும், அதை விட அதிகமாக நீங்கள் டெபாசிட் செய்தால், ஒவ்வொரு வைப்புத்தொகையிலும் குறைந்தபட்சம் ரூ .25 வசூலிக்கப்படும் அல்லது மொத்த மதிப்பில் 0.50 சதவீதம் வசூலிக்கப்படும்.

இந்திய தபால் அலுவலக வங்கியின் ஏபிஎஸ் கணக்கு கட்டணம்

இந்திய தபால் அலுவலக வங்கியின் இந்த புதிய விதியில், ஆதார் அட்டை இணைக்கப்பட்டு இயக்கப்படும் கட்டண முறைக்கும் நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். ஐபிபிபி (இந்திய தபால் அலுவலக வங்கி) நெட்வொர்க்கில் இலவச வரம்பற்ற பரிவர்த்தனைகள் உள்ளது. ஆனால் ​​ஐபிபிபி அல்லாத நெட்வொர்க்குகளுடன் ஒரு மாதத்திற்கு மூன்று பரிவர்த்தனைகள் மட்டுமே இலவசம். அவற்றில் பணம் திரும்பப் பெறுதல் மற்றும் மினி ஸ்டேட்மென்ட் ஆகியவை இதில் அடங்கும். இலவச வரம்பு முடிந்ததும், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

வரம்பை தாண்டி பணத்தை டெபாசிட் செய்யும்போது, ​​அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் ரூ .20 கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு மினி ஸ்டேட்மென்ட் பெற, நீங்கள் ரூ .5 செலுத்த வேண்டி இருக்கும். அதோடு வரம்பை மீறி பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டால் பரிவர்த்தனைத் தொகையில் 1% கட்டணமாக வசூலிக்கப்படும். இது குறைந்தபட்சம் ரூ. 1 முதல் அதிகபட்சம் ரூ. 20 வரை இருக்கும். இந்த கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி மற்றும் செஸ் வரிகள் விதிக்கப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Web Title: Post office savings tamil news post office bank interest rate

Next Story
புதிய ரூ.200 நோட்டுகள் அச்சடிக்கும் பணிகள் தொடக்கம்!RBI, Reserve Bank of India
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com