ரூ.35 லட்சம் ரிட்டன்; போனஸ்- கடன் வசதியும் உண்டு: போஸ்ட் ஆபீஸில் இந்த ஸ்கீமை கவனிச்சீங்களா?

நீங்கள் இந்த திட்டத்தில் இணைந்து நான்கு வருடங்கள் நிறைவுற்றிருந்தால் உங்களால் கடன் கூட அஞ்சல் துறையிடம் இருந்து பெற்றுக் கொள்ள இயலும்.

நீங்கள் இந்த திட்டத்தில் இணைந்து நான்கு வருடங்கள் நிறைவுற்றிருந்தால் உங்களால் கடன் கூட அஞ்சல் துறையிடம் இருந்து பெற்றுக் கொள்ள இயலும்.

author-image
WebDesk
New Update
post office schemes

village security plan : கிராம் சுராக்‌ஷா யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது தபால் துறை. இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் முதலீடு செய்யும் போது 80 வயதிலோ அல்லது கணக்கு வைத்திருப்பவர் மரணத்தின் போதோ போனஸூடன் கூடிய லம்ப்சம் ரிட்டர்ன்ஸ் கிடைக்கும் என்கிறது தபால் துறை.

Advertisment

இந்த சேமிப்பு திட்டத்தில் சேர ஒருவர் 19 வயது முதல் 55 வயதுக்குள் இருப்பது கட்டாயமாகிறது. இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 10 லட்சம் வரை முதலீடு செய்து கொள்ள முடியும். மாதாந்திர, வருடாந்திர முறைகளில் நீங்கள் உங்களின் பணத்தை முதலீடு செய்து கொள்ள இயலும்.

நீங்கள் இந்த திட்டத்தில் இணைந்து நான்கு வருடங்கள் நிறைவுற்றிருந்தால் உங்களால் கடன் கூட அஞ்சல் துறையிடம் இருந்து பெற்றுக் கொள்ள இயலும். மூன்று வருடங்களில் நீங்கள் இந்த திட்டத்தை முடித்துக் கொள்ளவும் முடியும். ஆனால் இந்த திட்டத்தின் பலன்கள் உங்களுக்கு கிடைக்காது. ஆண்டுக்கு இந்த திட்டத்தில் ரூ. 1000க்கு ரூ. 65 வரை போனஸை வழங்குகிறது அஞ்சல்துறை.

ஒருவர் தன்னுடைய 19 வயதில் ரூ. 10 லட்சம் செலுத்தி இந்த திட்டத்தில் இணைகிறார் என்றால் அவருடைய மாதாந்திர ப்ரீமியம் 55 ஆண்டுகளுக்கு ரூ. 1,515 ஆக இருக்கும். 58 ஆண்டுகளுக்கு ரூ. 1,463 ஆக இருக்கும். 60 ஆண்டுகளுக்கு ரூ. 1,411 ஆக இருக்கும். 55 வருடங்கள் என்றால் 31.60 லட்சத்தை அவர் பெற முடியும். 58 ஆண்டுகளுக்கு திட்டமிட்டிருந்தால் ரூ. 33.40 லட்சத்தை அவர் பெற முடியும்.

Advertisment
Advertisements

இது தொடர்பான மேலும் பல முக்கிய தகவல்களை ஒருவர் தன்னுடைய வீட்டின் அருகே இருக்கும் தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

Post Office Scheme

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: