/indian-express-tamil/media/media_files/CScD5OoEHHgXFKPMlzvN.jpg)
ஐந்தாண்டு தொடர் வைப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை டிசம்பர் காலாண்டில் 6.5 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாக அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
Post Office vs SBI vs HDFC Bank Recurring deposit rates: ஒரு பெரிய தொகை கையில் வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் முன்பு, வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் உள்ளிட்ட பல்வேறு முதலீட்டு விருப்பங்கள் உள்ளன.
ஆனால் சிறிய தொகையை பெரிதாக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஆர்.டி பக்க பலமாக இருக்கும். இந்த ஆர்.டி முதலீடுகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நல்ல தொகையை உருவாக்க உதவுகின்றன.
தற்போது நாம் போஸ்ட் ஆபிஸ், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்டவற்றின் ஆர்.டி வட்டி விகிதங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
போஸ்ட் ஆபிஸ் ஆர்.டி
ஐந்தாண்டு தொடர் வைப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை டிசம்பர் காலாண்டில் 6.5 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாக அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
எஸ்பிஐ
எஸ்பிஐ 5.75% முதல் 7% வரையிலான வட்டி விகிதத்தை ஒரு வருடம் முதல் பத்து ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் முதிர்ச்சிபெறும் ஆர்.டி திட்டங்களுக்கு வழங்குகிறது. இது, 15, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கி
HDFC வங்கி ஆறு மாதங்கள் முதல் பத்து வருடங்களில் முதிர்ச்சியடையும் RD களுக்கு 4.50%-7% வரையிலான வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது, ஜனவரி 24, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.
வட்டி விகிதங்கள்
போஸ்ட் ஆபிஸ் - 6.7%
எஸ்பிஐ - 6.50%
ஹெச்டிஎஃப்சி வங்கி - 7%
வரி விலக்கு பலன்கள்
1961 இன் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் வங்கி RD இல் உள்ள முதலீடுகளுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. இருப்பினும், 5 வருட அஞ்சல் அலுவலக கால வைப்புத்தொகை வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்குக்குத் தகுதியுடையது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.