ஓய்வூதிய திட்டமிடல் நிதி சுதந்திரத்தை தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் ஒருவர் தொடங்கினால் அவருக்கு பின்னாள்களில் பிரச்னை வராது. ஏனெனில் வட்டி வருவாய் கைகொடுக்கும். அந்த வகையில் அஞ்சலக மூத்தக் குடிமக்கள் திட்டத்தை தொடங்கலாம். இந்தத் திட்டம், முதிர்ச்சியின் போது நல்ல ரிட்டன் வழங்குகிறது. இதில் ஒரு முறை முதலீடு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உங்களுக்கு வட்டி அளிக்கிறது.
ரூ.2.05 வட்டி வருவாய்
நீங்கள் திட்டத்தில் ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால், காலாண்டு வட்டி ரூ.10,250 அல்லது ஆண்டுக்கு ரூ.41,000, முதிர்வுத் தொகை ரூ.7,05,000 ஆகும்.
அதேபோல், ரூ.10 லட்சம் ஒரு முறை முதலீட்டில், காலாண்டு வட்டி ரூ.20,500 அல்லது ஆண்டுக்கு ரூ.82,000, முதிர்வுத் தொகை ரூ.14,10,000 கிடைக்கும். மேலும், ஒருவர் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தால், அவர்களுக்கு காலாண்டு வட்டியாக ரூ.30,750 அல்லது ஆண்டுக்கு ரூ.1,23,000 கிடைக்கும். முதிர்வுத் தொகை ரூ.21,15,000 ஆக இருக்கும்.
வரி விலக்கு
இத்திட்டத்தின் கீழ் செய்யப்படும் நிதியாண்டில் ரூ. 1.50 லட்சம் வரையிலான டெபாசிட்கள் வருமான வரிச் சட்டம், 1961ன் பிரிவு 80C-ன் பலன்களுக்குத் தகுதிபெறும்.
60 வயதுக்கு மேற்பட்ட தனிநபர், 55 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிவில் ஊழியர் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்பு ஊழியர் ஆகியோர் SCSS கணக்கைத் திறக்க தகுதியுடையவர்கள்.
வட்டியானது SCSS இல் காலாண்டு அடிப்படையில் செலுத்தப்படும் மற்றும் டெபாசிட் செய்த தேதியிலிருந்து மார்ச் 31/ஜூன் 30/செப்டம்பர் 30/டிசம்பர் 31 வரை பொருந்தும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“