Post Office Scheme : தங்களின் வருமானத்திற்கு அதிக பாதுகாப்பும், ரிட்டர்ன்ஸும் கிடைத்தால் அந்த சேமிப்பு திட்டத்தை எந்த முதலீட்டாளர் தான் பாராட்டாமல் இருப்பார். இப்படியான முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது அஞ்சல் அலுவலகம் வழங்கும் மாதாந்திர வருமான திட்டம். monthly income scheme (MIS) என்று வழங்கப்படும் இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் ஒரு பெரிய தொகையை முதலீடாக செலுத்தும் போது, மாதந்தோரும் குறிப்பிட்ட காலத்திற்கு பென்சன் கிடைக்கும்.
monthly income scheme (MIS) என்ற திட்டத்தில் நீங்கள் ஒருவர் குறைந்தபட்சமாக ரூ. 1000 முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ. 4.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். கணவன் - மனைவி என இருவரும் சேர்ந்து முதலீடு செய்யும் போது ரூ. 9 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும் என்பது தம்பதிகளுக்கு கூடுதல் பலன். இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு 6.6% வட்டியை வழங்குகிறது தபால் நிலையம்.
உங்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் எவ்வளவு தெரியுமா?
நீங்கள் ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் முதலீடு செய்தால் உங்களுக்கு வருடத்திற்கு ரூ. 3,300 ஓய்வூதியம் கிடைக்கும். 5 வருடங்களுக்கு இது 16,500 ஆகும். ஆனால் தற்போது நீங்கள் ஒரு லட்சம் செலுத்தும் போது வருடத்திற்கு நீங்கள் ரூ. 33,000 வரை வருமானம் பெற முடியும். ஆண்டுக்கு நீங்கள் 29,700 வரை பெற வேண்டும் என்றால் நீங்கள் 4.5 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். ஐந்து ஆண்டுகளில் நீங்கள் ரூ. 1,48,500 வரை சம்பாதிக்க இயலும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil