Post office scheme Invest Rs 10000 : உங்களின் நீண்ட நாள் சேமிப்பை முதலீடாக செலுத்தி பாதுகாப்பான ரிட்டர்ன்ஸை அதுவும் எந்தவிதமான அபாயங்களும் இல்லாமல் பெற வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படியென்றால் தபால் நிலைய சிறு சேமிப்பு கணக்குகள் மற்றும் திட்டங்கள் உங்களுக்கு மிகவும் சரியான தீர்வாக இருக்கும்.
தபால் நிலைய ஆர்.டி. கணக்கு அப்படியான ஒரு பாதுகாப்பான ரிட்டர்ன்ஸை வழங்கும் திட்டமாகும். ரூ. 100-ஐ முதலீடாக செலுத்தி நீங்கள் சேமிப்பு கணக்கை துவங்க இயலும். மேலும் இவ்வளவு தான் செலுத்த வேண்டும் என்ற உச்ச வரம்பு ஏதும் இல்லை. இந்த சேமிப்பு திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஆனால் வங்கிகள் 6 மாதங்கள், 1 வருடம், 2 வருடங்கள், 3 வருடங்கள் போன்ற தேர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒரு முறை உங்களின் சேமிப்பு பணத்திற்கு வட்டியை கணக்கு செய்து உங்கள் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கிறது.
2020ம் ஆண்டில் இருந்து இந்த சேமிப்பு கணக்கிற்கான வட்டியானது 5.8% ஆக உள்ளது. இந்திய அரசு ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை வட்டி விகிதத்தில் மாற்றத்தை கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு மாதமும் நீங்கள் ரூ. 10 ஆயிரத்தை 10 வருடங்களுக்கு முதலீடாக செலுத்துகிறீர்கள் என்றால் 10 வருட முடிவில் 5.8% வட்டி விகிதத்துடன் ரூ. 16 லட்சத்தை திரும்பிப் பெற இயலும். ஆனால் நீங்கள் கால தாமதம் செலுத்தாமல் ஒவ்வொரு மாதமும் ரூ. 10 ஆயிரம் செலுத்தி வர வேண்டும். நீங்கள் ஒருவேளை செலுத்த தவறினால் 1% பணத்தை அபராதமாக செலுத்த வேண்டும். நான்கு தவணைகள் நீங்கள் பணம் செலுத்த தவறும் பட்சத்தில் உங்களின் கணக்கு முடக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தொடர் டெபாசிட்களில் முதலீடு செய்தால் டிடிஎஸ் கழிக்கப்படும், டெபாசிட் ரூ. 40,000க்கு மேல் இருந்தால், ஆண்டுக்கு 10% வரி விதிக்கப்படும். RD இல் பெறப்படும் வட்டிக்கும் வரி விதிக்கப்படும், ஆனால் முழு முதிர்வுத் தொகைக்கும் வரி விதிக்கப்படாது. வரி விதிக்கக்கூடிய வருமானம் இல்லாத முதலீட்டாளர்கள், FDகளைப் போலவே படிவம் 15G ஐப் பதிவு செய்வதன் மூலம் TDS விலக்கு கோர முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil