Post Office Scheme : உங்கள் முதலீடும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் அபாயமற்ற ரிட்டர்ன்ஸும் பெற வேண்டும் என்று விரும்பினால் தபால் நிலைய முதலீடுகள் தான் அதற்கு ஏற்றவை. லட்சாதிபதி ஆக வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் பட்சத்தில் போஸ்ட் ஆஃபிஸ் ரெக்குரிங் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யலாம். அந்த திட்டத்தின் பயன்கள், சிறப்பம்சங்கள், வட்டி விகிதம் என அனைத்து தகவல்களும் இங்கே!
நீங்கள் வெறும் ரூ. 100 முதலீடாக செலுத்தி இந்த சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து கொள்ள இயலும். முதலீட்டு உச்சவரம்பு ஏதும் கிடையாது. நீங்கள் விரும்பிய பணத்தை முதலீடு செய்து கொள்ள இயலும். வங்கிகளில் 6 மாதங்கள், ஒரு வருடம் மற்றும் மூன்று வருடங்கள் என்று லாக்-இன் பீரியட்கள் இருந்தாலும் கூட, அஞ்சல் நிலைய ரெக்குரிங் டெபாசிட் திட்டத்தின் லாக்-இன் ப்ரீயட் 5 ஆண்டுகளாகும்.
தற்போது இந்த சேமிப்பு திட்டத்திற்கு வழங்கப்பட்டு வரும் வட்டியானது 5.8% ஆகும். நீங்கள் மாதம் 10 ஆயிரம் என்று 10 வருடங்களுக்கு செலுத்தும் பட்சத்தில் உங்களுக்கு வட்டியுடன் ரூ. 16,28,963 ரிட்டர்ன்ஸாக கிடைக்கும். ஆர்.டி.யில் நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வர வேண்டும். தவறும் பட்சத்தில் 1% முதலீடு அபராதமாக வசூலிக்கப்படும்.
டி.டி.எஸ். பிடித்தம் செய்யப்படும். அதே நேரத்தில் முதலீடு ரூ. 40 ஆயிரத்தை தாண்டும் பட்சத்தில் 10% வருடாந்திர வரி பிடித்தம் செய்யப்படும். ஆர்.டி. மூலம் கிடைக்கும் வட்டிக்கும் வரி கட்ட வேண்டும். FDகளைப் போலவே, வரி விதிக்கக்கூடிய வருமானம் இல்லாத முதலீட்டாளர்கள் படிவம் 15G-ஐ பூர்த்தி செய்வதன் மூலம் TDS விலக்கைப் பெறலாம்.
தபால் நிலையத்தைப் போன்றே பல்வேறு தனியார் மற்றும் அரசு வங்கிகளும் ரெக்குரிங் டெபாசிட் சேவைகளை வழங்கி வருகின்றனர். யெஸ் வங்கி 12 முதல் 33 மாதங்கள் வரையிலான திட்டத்திற்கு 7.00% வட்டி வழங்குகிறது. எச்.டி.எஃப்.சி. வங்கி 5.50% வட்டியை 90 முதல் 120 மாதங்களுக்கு வழங்குகிறது. ஆக்ஸிஸ் வங்கி 5.50% வட்டியை 5 முதல் 10 ஆண்டுகளுக்கு வழங்குகிறது. எஸ்.பி.ஐ. வங்கி 5 முதல் 10 வருடங்களுக்கான முதலீட்டிற்கு 5.40% வட்டியை வழங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil